Pages

Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

13 September 2009

சச்சின் தெரிவித்த யோசனை


ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெரிவித்த யோசனையை சோதித்து பார்க்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் டுவண்டி/20 போட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருநாள் போட்டிக்கான 100 ஓவரை 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸாக விளையாடலாம் என்று நட்சத்திர வீரர் சச்சின் சில தினங்களுக்கு முன் யோசனை தெரிவித்திருந்தார். இதற்கு கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) இந்த யோசனையை ஏற்க முடியாது என்று அறிவித்தது.

இந்நிலையில், ஐசிசி கிரிக்கெட் மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் லண்டனில் கூறியதாவது:
சச்சினின் யோசனை பகல்&இரவு ஆட்டங்களுக்கு சிறப்பாக இருக்கும். 2 இன்னிங்ஸாக விளையாடுவதால் பேட்ஸ்மேன்களுக்கு சதம் அடிக்க அதிக வாய்ப்பு இருக்காது. இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனினும், இந்த மாதிரி சோதனைகளை சர்வதேச கிரிக்கெட்டில் சோதித்து பார்க்க முடியாது. முதலில் உள்ளூர் போட்டிகளில் சோதித்து பார்க்கலாம். இந்த சோதனையில் வெற்றி கிடைத்தால் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு ரிச்சர்ட்சன் கூறினார்

24 June 2009

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, டோனி எச்சரிக்கை


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய துணை கேப்டன் ஷேவாக்கின் தோள்பட்டை காயம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷேவாக் தனது காயத்தை மறைத்தார் என்றும், அதனால் அவர் மீது இந்திய கேப்டன் டோனி அதிருப்தியில் அடைந்தார் என்றும் தகவல்கள் வெளியாயின.

இந்த நிலையில் அணி வீரர்களை டோனி கடுமையாக எச்சரித்து இருக்கிறார். வீரர்கள் காயத்துடன் இருந்தாலோ, காயம் அடைந்தாலோ அல்லது தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலோ அதை எந்த காரணத்தை கொண்டும் மறைக்க கூடாது. அணியின் நலனை கருத்தில் கொண்டு காயம் பற்றி ஒளிவு மறைவின்றி என்னிடமோ அல்லது கிரிக்கெட் வாரியத்திடமோ தெரிவித்து விட வேண்டும். ஏனெனில் இது போன்ற நிலைமையில் ஆடும் போது அது அணியையும் பாதித்து விடும் என்ற தனது தோழர்களை அறிவுறுத்தி இருக்கிறார்.

மேலும் ஓய்வு தேவை என்று விரும்பும் வீரர்கள் அதனை தெரியப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும் வீரர்களிடம் டோனி கூறியுள்ளார்.

16 June 2009

கவுத்துட்டாங்கய்யா கவுத்துட்டாங்க...


உலக கோப்பை டி20 தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா பரிதாபமாக வெளியேறியதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அவரது உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மண்ணைக் கவ்வியது. அடுத்து வாழ்வா? சாவா? என்ற மிக முக்கியமான 2வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் நேற்று முன்தினம் இரவு மோதியது. இந்திய அணியில் இர்பான், ஓஜா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆர்.பி.சிங், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் அதிர்ச்சி தோல்வியால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.

டோனிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று பீகார் ரஞ்சி கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த ஒரு அணியும் 100 சதவீதம் வெற்றியை பெற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா? ஆட்டத்தில் டோனி செயல்பட்ட விதம் சரியல்ல என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா, முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, முன்னாள் வீரர் சந்திரசேகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் மதன்லால், தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் சந்துபோர்டே ஆகியோர் தோல்விக்கு டோனியை காரணம் சொல்ல முடியாது என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே ரசிகர்கள்தான் தோனிக்கு கோயில் கட்டினார்கள்

தவறான முடிவுகள்
அபாரமாகப் பந்துவீசி 3 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றிய ஆர்.பி.சிங்குக்கு 4வது ஓவரை தராமால் இஷாந்த் ஷர்மாவை பந்துவீச அழைத்தது. இஷாந்த் தனது 4வது ஓவரில் 13 ரன் விட்டுக் கொடுத்தார்.

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கும் 3 ஓவர் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. யுவராஜ் 2 ஓவரில் 20 ரன் விட்டுக் கொடுத்தார். இந்த 2 ஓவரையும் ஆர்.பி.சிங் மற்றும் ஜாகீர் கானுக்கு கொடுத்திருக்கலாம்.

உதிரிகளாக இந்திய அணி 16 ரன்களை விட்டுக் கொடுத்தது (இதில் 14 ஒய்டு).

இந்திய அணி பேட்டிங்கின்போது ரோகித், ரெய்னா ஆட்டமிழந்ததும் 4வது வீரராக ரவீந்திர ஜடேஜாவை களமிறக்கியது இமாலயத் தவறாக அமைந்துவிட்டது. பவுன்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அவரது பலவீனத்தை, இங்கிலாந்து வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

டெஸ்ட் போட்டியைப் போல விளையாடிய ஜடேஜா 35 பந்தில் (கிட்டத்தட்ட 6 ஓவர்) 25 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு முன்பாக யுவராஜ் மற்றும் யூசுப் பதானை இறக்கி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும்.

தேவைப்படும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்த நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தும் கேப்டன் டோனி சிக்சர், பவுண்டரி அடிக்க முயற்சிக்காமல் சிங்கிள் தட்டி வெறுப்பேற்றினார்.

10 June 2009

Sri Lanka vs West Indies Live Video

Sri Lanka vs West Indies Live Video

07 June 2009

இந்திய அணி வெற்றி வங்காளதேசத்தை சாய்த்தது

20 ஓவர் உலக கிரிக்கெட்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங், ஓஜா ஆகியோரின் சிறப்பான செயல்பட்டால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு நாட்டிங்காமில் நடந்த `ஏ' பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. காயம் காரணமாக ஷேவாக் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதே சமயம் உடல்தகுதி பெற்று விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி கவுதம் கம்பீரும், ரோகித் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் அணிக்கு ஓரளவு பயனுள்ள துவக்கத்தை தந்தனர். அணியின் ஸ்கோர் 59 ரன்களை தொட்ட போது, ஷகிப் அல்ஹசன் பந்து வீச்சில் ரோகித் ஷர்மா (36 ரன்கள், 23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) போல்டு ஆனார்.

அடுத்து கேப்டன் டோனி உள்ளே வந்தார். கம்பீரும், டோனியும் ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே அதிகமாக எடுத்தனர். இதனால் அடுத்த 6 ஓவர்களில் ரன்வேகம் வெகுவாக குறைந்தது. டோனி 26 ரன்களில் (21 பந்து, ஒரு சிக்சர்) போல்டு ஆனார்.

இதை தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு யுவராஜ்சிங் களம் புகுந்தார். அவர் வந்த பின்னரே ஆட்டத்தில் சூடு பிடித்தது. ரசிகர்களும் குஷியானார்கள். நயீம் இஸ்லாம் ஓவரில் யுவராஜ்சிங் 3 சூப்பரான சிக்சர்களை கிளப்பினார். ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

இதற்கிடையே கம்பீர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் தனது 5-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அதே ரன்னிலேயே (50 ரன், 46 பந்து, 4 பவுண்டரி) அவர் வெளியேறினார். அடுத்து சுரேஷ் ரெய்னா வந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிக் கொண்டிருந்த யுவராஜ்சிங் சிக்சர் அடிக்க முயற்சித்த போது கேட்ச் ஆனார். அவர் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 41 ரன்கள் விளாசினார். ரெய்னா 10 ரன்களில் (8 பந்து) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் 67 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்காளதேச அணி விளையாடியது. தொடக்கத்தில் அந்த அணியின் ஆட்டம் இந்தியாவுக்கு பீதி ஏற்படுத்துவது போலவே இருந்தது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 15 ரன்னிலும், 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் அஷ்ரபுல் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். என்றாலும் ஒரு கட்டத்தில் வங்காளதேச அணி 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது.

இதன் பிறகு சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா ஒரே ஓவரில் ஜூனட் சித்திக் (41 ரன், 22 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ( 8 ரன்) ஆகியோரை காலி செய்தார். அத்துடன் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஓஜாவின் சுழலில் மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் அவர்களால் இலக்கை தொட முடியவில்லை. 20 ஓவரில் வங்காளதேச அணியால் 8 விக்கெட்டுக்கு 155 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டும், இஷாந்த் 2 விக்கெட்டும், ஜாகீர், யுசுப் பதான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஏறக்குறைய சூப்பர்-8 சுற்றை உறுதி செய்து விட்ட இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி அயர்லாந்துடன் மோதுகிறது.

04 June 2009

ESPN STAR Sports ropes in Ganguly as latest analyst


புதிய வர்ணனையாளர் சவுரவ் கங்குலி
உலக கோப்பை டி20 தொடரின் வர்ணனையாளர் குழுவில், இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘அலசல் நிபுணராக’ சேர்க்கப்பட்டுள்ளார். இஎஸ்பிஎன்&ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை நேற்று உறுதி செய்துள்ளது.

டிவி வர்ணனையாளர் குழுவில் கங்குலி இடம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் முக்கிய அம்சங்கள், கேப்டன்களின் சிறப்பான வியூகங்கள், அபத்தமான தவறுகள் பற்றி அதிரடியாக விமர்சித்து கங்குலி அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்ணனையாளர் குழு: அக்ரம், மஞ்ரேக்கர், ஆலன் வில்கின்ஸ், ஹர்ஷா போக்லே, நாசர் ஹுசேன், டேவிட் லாயிட், இயான் சேப்பல், சைமன் டூல், வெசல்ஸ், பிஷப், ரணில் அபெநாயகே, அதார் அலி கான், கங்குலி.

05 May 2009

டிவென்டி 20 உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டிவென்டி 20 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் பிரக்யன் ஓஜா மற்றும் ரவீந்தர் ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தப்பா, ஜோகிந்தர் ஷர்மா மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீகாந்த் தலைமையிலான பி.சி.சி.ஐ. தேர்வுக் குழு வெளியிட்ட 15 பேர் கொண்ட இந்திய அணி விபரம் வருமாறு:

மகேந்திர சிங் தோனி (கேப்டன்)
வீரேந்தர் சேவாக் (துணை கேப்டன்)
கவுதம் கம்பீர்
சுரேஷ் ராய்னா
யுவராஜ் சிங்
ஹர்பஜன் சிங்
ரோஹித் ஷர்மா
யூசுப் பதான்
இர்பான் பதான்
ஜாகீர்கான்
இஷாந்த் ஷர்மா
பிரவீன் குமார்
ஆர்.பி.சிங்
ரவீந்தர் ஜடேஜா
பிரக்யன் ஓஜா

04 May 2009

டுவென்டி20 போட்டிகள் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல - சச்சின்

டுவென்டி20' போட்டிகள் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது கிரிக்கெட் வீரர்களுக்கான விளையாட்டு,'' என்கிறார் சச்சின். கிரிக்கெட் அரங்கில் விறுவிறுவென முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது "டுவென்டி20' போட்டிகள். "இவ்வகை போட்டிகளில் இளம் வீரர்கள் மட்டுமே சாதிக்க முடியும்' என கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் புக்கானன் உட்பட ஒரு சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதற்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சச்சின் கூறியதாவது:

"டுவென்டி20' போட்டிகளில் இளைஞர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என கூறியவர்களுக்கு, கிரிக்கெட் அறிவு அவ்வளவாக இல்லை என்றே கூற வேண்டும். இது கிரிக்கெட் வீரர்களுக்கான விளையாட்டு. இவ்வகை போட்டிகளில் வயது பிரச்னையாக இருக்காது என்பதே எனது கருத்து. மும்பை அணி வீரர் ஜெயசூர்யா (39 வயது), "டுவென்டி20' போட்டிகளில் அசத்தி வருகிறார். அவரது பேட்டிங் நுணுக்கங்கள் வியப்பை அளிக்கிறது. உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களுள் ஜெயசூர்யாவும் ஒருவர். சதம் முக்கியமல்ல: ஒவ்வொரு போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை. நான் அணியின் வெற்றிக்காக விளையாடி வருகிறேன். சதத்தை விரட்டி நான் செல்ல வில்லை. அது என் வழியில் வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு சச்சின் கூறினார்.

29 April 2009

ஐசிஎல் கிரிக்கெட் வீரர்கள் மீதான தடை நீக்கம்: பிசிசிஐ


மும்பை, ஏப்.29: இந்திய கிரிக்கெட் லீக் வீரர்கள் மீதான தடையை நீக்க பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஐசிஎல்லில் உள்ள வீரர்களில் சிலர், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களை சந்தித்து, லீகில் இணைந்ததன் மூலம் தவறுபுரிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டதாகவும், இதையடுத்து லீக் வீரர்கள் மீதான தடையை நீக்குவது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் தெரிவித்தார்.

எனினும் ஐசிஎல்லிருந்து விலகும் வீரர்களுக்கு ஒரு வருடம் வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாட அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் உடனடியாக விளையாடத் தொடங்க வேண்டும் என்றும் மனோகர் கூறினார்.

'மே 31க்குள் விலகும் வீரர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐக்குத் திரும்பும் வீரர்களை வரவேற்கிறோம்' என பிசிசிஐ செயற்குழு கூட்டம் முடிந்தபின்னர் மனோகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

18 April 2009

2011 உலககோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் நடக்காது: ஐ.சி.சி.,


2011ல் பாகிஸ்தானில் நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஐ.சி.சி. ரத்து செய்தது. 2011ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் நாடுகள் நடத்துகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு நடைபெற கூடிய கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கு 8-10 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும்.

17 April 2009

தோனி, ஹர்பஜனுக்கு பத்ம விருது விழா புறக்கணிப்பின் எதிரொலி

பத்ம விருது வழங்கும் விழாவை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு, மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய விருதுக்கு உரிய மரியாதை அளிப்பது தொடர் பாக, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் கில் தெரிவித்துள்ளார்.


பத்ம விருதுகள் வழங்கும் விழா, கடந்த 14 ம் தேதி டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. பத்ம ஸ்ரீ விருதுக்கு தோனி, ஹர்பஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற, அவர்கள் விழாவில் பங்கேற்க வில்லை. அந்த சமயத்தில் இருவரும் டில்லியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குற்றசாட்டு எழுந்தது. ஆனால் ஹர்பஜன் "குடும்ப சூழ்நிலை காரணமாக விருது பெற வர முடியவில்லை, என தெரிவித்திருந்தார். பலதரப்பிலும் இருவர் மீதும் அதிருப்தி எழுந்துள்ளது.


இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கூறியதாவது: பத்ம விருதுகள் பெறுவது என்பது நாட்டின் மிகப் பெரிய கவுரவம். இதற்கு தேர்வாகி இருப்பது, சாதாரண விஷய மல்ல. ஆனால் தோனி, ஹர்பஜன் இருவரும் பொறுப் பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். உயரிய விருதுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளேன்.


எங்கும் இல்லை: இது போதாது என்று விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் கலந்து கொள்ளாமல், அவர்களுக்குப் பதில் வேறொருவரை அனுப்பி வைக்கின்றனர். இது முற்றிலும் மரியாதை குறைவான செயல். கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஜனாதிபதி, அர்ஜுனா விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். ஆனால் வெற்றி பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே நேரடியாக பெற்றுக் கொண்டனர். மற்ற வர்கள் அவர்களுக்குப் பதில் வேறொருவரை அனுப்பி வைத்துள்ளனர். இது போன்ற செயல் மற்ற எந்த நாட்டிலும் இல்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் இம்மாதிரியான அவமரியாதையை காண முடியாது.


கடும் நடவடிக்கை: இனி மேல் இது போன்ற செயல்களில் விளையாட்டு வீரர்கள் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விருதுக்கு தேர்வு பெற்ற வர்கள் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியவில்லை எனில் தகுந்த காரணத்தை கூறி மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும். இவ்வாறு கில் கூறினார்.


இருவர் மீதும் "கிரிமினல்' மனு: பத்ம விருதுகளை புறக்கணித்த தோனி மற்றும் ஹர்பஜன் மீது, சீனியர் வக்கீலான சுதிர் குமார் ஓஜா என்பவர் பீகார், முஜாபர்பூர் கோர்டில் கிரிமினல் மனு ஒன்றை நேற்று பதிவு செய்துள்ளார். அவதூறு செய்தல், அச்சுறுத்தல், அமைதியை குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

09 April 2009

டெஸ்ட் தரவரிசை: காம்பீர் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரபால் 901 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். யூனுஸ்கான் (பாகிஸ்தான்) 2-வது இடத்திலும், சங்ககரா (இலங்கை) 3-வது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 445 ரன்கள் குவித்து முத்திரை பதித்த காம்பீர் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தெண்டுல்கர் 14-வது இடத்தில் உள்ளார். ஷேவாக் 17-வது இடத்தில் இருந்து 20-வது இடத்துக்கும், லட்சுமண் 15-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கும் பின்தங்கி உள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை வீரர் முரளீதரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஸ்டெய்ன் (தென்ஆப்பிரிக்கா) 2-வது இடத்திலும், ஜான்சன் (ஆஸ்திரேலியா) 3-வது இடத் திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 6-வது இடத்தில் உள்ளார். ஜாகீர்கான் 14-வது இடத்தில் இருந்து 12-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

25 March 2009

இந்திய கிரிக்கெட்டின் எழுச்சி - சச்சின் மகிழ்ச்சி


கடந்த சில ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் எழுச்சிமிகு காலமாக விளங்கி வருவதாக சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணி வெற்றி அணியாக விளங்குவதாக அவர் உற்சாகத்தோடு கூறியுள்ளார். இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நேப்பியர் பார்க்கில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னுடைய 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 2, 3 ஆண்டுகள் போல எழுச்சிமிகுந்த காலத்தை நான் பார்த்ததில்லை.

இந்திய அணி வெற்றி அணியாக விளங்கி வருகிறது. நானும் திராவிட்டும் இதில் அங்கம் வகிப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயமாக இது இந்திய அணிக்கு உற்சாகமான காலம்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது மிகவும் விசேஷமானது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போது சிறப்பாக விளையாடிவ ருகிறது. இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக ஆடிவருவதே இதற்கு காரணம். வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கான ஆரம்பமாக 2001-ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி அமைந்தது.

அதன் பிறகு வெஸ்ட் இண்டீசில் வெற்றிபெற்றோம். தொடர்ந்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாகை சூடியுள்ளோம்.

எல்லா நாடுகளிலும் இந்திய அணி முத்திரைபதித்துள்ளது. இதைத்தான் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடிந்தது திருப்தியை அளிக்கிறது.

தற்போதைய தொடர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த தொடரை வெல்ல முடிந்தால் இன்னும் கூட சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாடு களுக்கு மாற்றப்பட்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், இந்த போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெற்றி ருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற இருப்பதால் இந்திய வீரர்கள் போட்டி நடைபெறும் காலத்தில் குடும்பத்தினரை பிரிந்திருக்க நேரும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

24 March 2009

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கம்?


ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலி, சர்வதேச போட்டிகளி லிருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும் ஐபிஎல் போட்டிகளில் அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

இதனிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் கங்குலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கங்குலியின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

இந்நிலையில், கங்குலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. கொல்கத்தா அணி சார்பில் கருத்து தெரிவித்துள்ள மேலாளர் ஜான் புக்கனன் கேப்டன் பதவி பற்றி இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது, இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ராகுல் திராவிட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பீட்டர்சன் கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

22 March 2009

மக்களிடம் மன்னிப்பு கேட்டது - ஐ.பி.எல்


ஐ.பி.எல் சீசன் -2 டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் ஐ.பி.எல், தலைவர் லலித் மோடி , பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங் மனோகர் , பி.சி.சி.ஐ., அதிகாரிகள் ; ஐ.பி.எல்., உரிமையார்கள் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனையில் மத்திய உள் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தேர்தலுக்கு இடையூறில்லாமல், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், போட்டியை முழுமையாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை முடிவில் தேர்தலின் போது போட்டிகளை நடத்த முழுமையான பாதுகாப்பு அளிக்க முடியாது என்ற காரணத்தால் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இடம் மாற்றப்பட்டாலும் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என லலித் மோடி கூறினார். இங்கிலாந்து , தென்ஆப்ரிக்கா ஆகிய இரு நாடுகளும் போட்டிகளை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி.எல்., போட்டிகள் மாற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த மோடி, மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார்.

ஐபிஎல் போட்டிகளை தங்ளது நாட்டில் நடத்த தயார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

21 March 2009

புலிகளுக்கு சமர்ப்பணம் - சச்சின் !


இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. வீரர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். எனினும் அலட்சியமாக விளையாட மாட்டோம்.

புலிகள் பாதுகாப்பு குறித்து நான் ஏற்கனவே ஓர் அறிவிப்பு கொடுத்துள்ளேன் .நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் 40,000 புலிகள் இருந்தன . அனால் இப்பொழுது 1,700 புலிகள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .மாதத்திற்கு ஒரு புலி வேட்டையாட படுகிறது . நான் சிறுவனாக இருந்த பொழுது டினோசர் என்ற ஒரு மிருகம் இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை. அந்த நிலை புலிகளுக்கும் வந்து விட கூடாது .

நியூசீலாந்துக்கு எதிரான தனது சதத்தை புலிகளுக்கு சமர்ப்பணம் செய்வதாக சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

குறிப்பு ..

இவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இவர் புலி என்று சொல்லுவது விடுதலை புலியல்ல.

16 March 2009

ஓய்வுக்கு பின் வாழ்க்கை எப்படி - அனில் கும்ளே


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வாழ்க்கை மிகவும் அமைதியான முறையில் சென்று கொண்டிருப்பதாக அனில் கும்ளே தெரிவித் துள்ளார்.

இந்திய அணியில் 18 ஆண்டுகாலமாக அசைக்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் கும்ளே. டில்லியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஒரே இன்னிங் சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத் தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொட ரில் காயமடைந்த கும்ளே, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனது கிரிக்கெட் அனு பவம் குறித்து கும்ளே கூறியது: நான் முதலில் மித வேகப்பந்து வீச்சாளராகத் தான் கிரிக்கெட் வாழ்க் கையை துவக்கினேன். சில சீனியர் வீரர்கள் எனது பவுலிங் குறித்து சந்தேகம் தெரிவித்தனர். அப்போது எனது சகோதரர் தினேஷ் “லெக் ஸ்பின்’ பந்து வீச்சிற்கு மாறுமாறு கருத்து தெரிவித்தார். அவரது கருத்தை ஏற்றபிறகு தான் லெக் ஸ்பின்னராக மாறி னேன். ஒருசில நேரங்களில் இரவில் விழிக்கும் போது நான் எப்படி விக்கெட்டு கள் வீழ்த்தினேன் என்பதை எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். களத்தில் எடுக்கும் முடிவுகளை எப்போதும் சக வீரர் களிடமும், மற்றவர் களிடமும் பகிர்ந்து கொள் வேன். துரதிருஷ்டவசமாக எனக்கு ஏற்பட்ட காயத் தால் சர்வதேச போட்டி களில் இருந்து விலக நேரிட்டது.

ஓய்விற்கு பிறகு வாழ்க்கை அமைதி யாக சென்று கொண்டு உள்ளது. மறுநாள் காலை யில் எழுந்திருக்கும் போது பந்து வீச வேண்டிய வேலை இல்லை என்பது வித்தியாசமான உணர்வாக இருந்தது. இருப்பினும் கிரிக்கெட் தொடர்பை விட்டுவிட மாட்டேன். இவ்வாறு கும்ளே தெரிவித்தார்.

25 February 2009

IPL.T20 அட்டவணை

இந்தியன் பிரீமியர் லீக் (IPL.T20) 20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி மே 24ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

ஏப்ரல் 10-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு அரை இறுதி ஆட்டம் உள்பட 9 ஆட்டங்கள் நடக்கிறது.

ஏப்ரல் 10: ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் (ஜெய்ப்பூர்)

ஏப்ரல் 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெக்கான் சார்ஜர்ஸ் (கொல்கத்தா); சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் (சென்னை)

ஏப்ரல் 12: டெல்லி டேர் டெவில்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் (டெல்லி); மும்பை இண்டியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் (மும்பை)

ஏப்ரல் 13: டெக்கான் சார்ஜர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் (ஹைதராபாத்)

ஏப்ரல் 14: ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பெங்களூரு)

இத்தொடரில் பகல் நேரப் போட்டி மாலை 4 முதல் 7 மணி வரையும், பகலிரவுப் போட்டி இரவு 8 முதல் 11 மணி வரையும் நடைபெறும்.