Pages

17 April 2009

தோனி, ஹர்பஜனுக்கு பத்ம விருது விழா புறக்கணிப்பின் எதிரொலி

பத்ம விருது வழங்கும் விழாவை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு, மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய விருதுக்கு உரிய மரியாதை அளிப்பது தொடர் பாக, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் கில் தெரிவித்துள்ளார்.


பத்ம விருதுகள் வழங்கும் விழா, கடந்த 14 ம் தேதி டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. பத்ம ஸ்ரீ விருதுக்கு தோனி, ஹர்பஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து விருதை பெற, அவர்கள் விழாவில் பங்கேற்க வில்லை. அந்த சமயத்தில் இருவரும் டில்லியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குற்றசாட்டு எழுந்தது. ஆனால் ஹர்பஜன் "குடும்ப சூழ்நிலை காரணமாக விருது பெற வர முடியவில்லை, என தெரிவித்திருந்தார். பலதரப்பிலும் இருவர் மீதும் அதிருப்தி எழுந்துள்ளது.


இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கூறியதாவது: பத்ம விருதுகள் பெறுவது என்பது நாட்டின் மிகப் பெரிய கவுரவம். இதற்கு தேர்வாகி இருப்பது, சாதாரண விஷய மல்ல. ஆனால் தோனி, ஹர்பஜன் இருவரும் பொறுப் பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். உயரிய விருதுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளேன்.


எங்கும் இல்லை: இது போதாது என்று விருதுக்கு தேர்வு செய்யப்பட்டோர் கலந்து கொள்ளாமல், அவர்களுக்குப் பதில் வேறொருவரை அனுப்பி வைக்கின்றனர். இது முற்றிலும் மரியாதை குறைவான செயல். கடந்த ஆண்டு தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஜனாதிபதி, அர்ஜுனா விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். ஆனால் வெற்றி பெற்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே நேரடியாக பெற்றுக் கொண்டனர். மற்ற வர்கள் அவர்களுக்குப் பதில் வேறொருவரை அனுப்பி வைத்துள்ளனர். இது போன்ற செயல் மற்ற எந்த நாட்டிலும் இல்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் இம்மாதிரியான அவமரியாதையை காண முடியாது.


கடும் நடவடிக்கை: இனி மேல் இது போன்ற செயல்களில் விளையாட்டு வீரர்கள் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விருதுக்கு தேர்வு பெற்ற வர்கள் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ள முடியவில்லை எனில் தகுந்த காரணத்தை கூறி மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும். இவ்வாறு கில் கூறினார்.


இருவர் மீதும் "கிரிமினல்' மனு: பத்ம விருதுகளை புறக்கணித்த தோனி மற்றும் ஹர்பஜன் மீது, சீனியர் வக்கீலான சுதிர் குமார் ஓஜா என்பவர் பீகார், முஜாபர்பூர் கோர்டில் கிரிமினல் மனு ஒன்றை நேற்று பதிவு செய்துள்ளார். அவதூறு செய்தல், அச்சுறுத்தல், அமைதியை குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment