Pages

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

20 May 2011

புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்

புதிய தலைமை செயலகத்தை தற்போது பயன்படுத்தாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. புதிய தலைமை செயலகம் எதிரில் மிக அருகிலேயே கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் பாதை செல்கிறது. அந்த மேம்பாலத்தில் இருந்து எளிதில் சட்டமன்றத்தை தாக்க முடியும். எனவே, இது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ரூ.425 கோடிக்கு திட்டமிட்டு இதுவரை ரூ.1200 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அவசரமாக கட்டியதால் கட்டிடத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே செலவு பல மடங்காக உயர்ந்து இருக்கிறது என்று புகார்கள் வந்துள்ளன. வேலையும் இன்னும் முடியவில்லை. அதுபற்றி விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதுவரை புதிய தலைமை செயலகத்தை எந்த அலுவலுக்கும் பயன்படுத்த அரசு விரும்பவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்டிடம் கட்டப்பட்டதால் திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, அண்ணா சாலை பகுதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க அரசு விரும்புகிறது. புதிய சட்டசபை கட்டிடத்தை பயன்படுத்துவது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவு செய்யப்படும் என்று ஜெயலலிதா கூறி உள்ளார்

16 May 2011

ஈழ பிரச்சினை:- மாநில முதல்வரால் ஓரளவுக்குதான் செயல்பட முடியும் – ஜெ

கேள்வி: உலகத் தமிழர்கள் அனைவரும் இன்றைக்கு உங்களிடம் இருந்து ஒரு துணையை, ஒரு பாதுகாப்பை எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஈழத் தமிழர்கள். அவர்களுக்கு உங்கள் நம்பிக்கை வார்த்தைகள் என்ன?

பதில்: இலங்கை தமிழர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆள்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பல பொதுக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பல அறிக்கைகளையும் வெளியிட்டு இருக்கிறேன். அந்த துயரங்களுக்கு காரணம் இலங்கை அரசுதான்.

ஆகவே தமிழர்கள் என்ற முறையில், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டியது, நம் அனைவருடைய கடமை. இதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதற்கு நம்மால் முயன்றதை அனைவரும் செய்ய வேண்டும்.

மாநில முதல்வர் என்ற முறையில் ஓரளவுக்குத்தான் இதில் செயல்பட முடியும். ஏனென்றால் இது சர்வதேச பிரச்சினை. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை. நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.
மத்திய அரசு இதில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நான் மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவேன்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு 2 வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஒன்று, இனப் படுகொலைக்காக, போர் குற்றங்களுக்காக, இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு கவுரவமான வாழ்க்கையை, கண்ணியமான வாழ்க்கையை அளிக்க இலங்கை அரசை வற்புறுத்துவதற்காக, இலங்கை அரசு பணியவில்லை என்றால், அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார தடைகள் கொண்டுவர இந்தியா மற்ற நாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதைச் செய்தால் நிச்சயமாக இலங்கை அதிபர் பணிந்தாக வேண்டும். இலங்கை அரசு பணிந்தாக வேண்டும். பிரச்சினை தீரும்,” என்றார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் விவரம்

புதிய அமைச்சரவையில் ஜெயலலிதா தவிர 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்களே என்பது குறிப்பிடதக்கது.
அவர்கள் விவரம்:
  1. ஜெ. ஜெயலலிதா – முதல்வர்
  2. ஓ. பன்னீர்செல்வம் – நிதி அமைச்சர்
  3. கே.ஏ. செங்கோட்டையன் – விவசாயத் துறை அமைச்சர்
  4. நத்தம் ஆர். விஸ்வநாதன் – மின்சாரத்துறை அமைச்சர்
  5. கே.பி. முனுசாமி – உள்ளாட்சித்துறை அமைச்சர்
  6. சி. சண்முகவேலு – தொழில்துறை அமைச்சர்
  7. ஆர். வைத்திலிங்கம் – வீட்டுவசதித்துறை அமைச்சர்
  8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி – உணவுத்துறை அமைச்சர்
  9. சி. கருப்பசாமி – பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்
  10. பி. பழனியப்பன் – உயர்கல்வித்துறை அமைச்சர்
  11. சி.வி. சண்முகம் – பள்ளிகல்வித்துறை அமைச்சர்
  12. செல்லூர் கே. ராஜு – கூட்டுறவுத்துறை அமைச்சர்
  13. கே.டி. பச்சமால் – வனத்துறை அமைச்சர்
  14. எடப்பாடி கே. பழனிசாமி – நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
  15. எஸ்.பி. சண்முகநாதன் – இந்து அறநிலையத்துறை அமைச்சர்
  16. கே.வி. ராமலிங்கம் – பொதுப்பணித்துறை அமைச்சர்
  17. எஸ்.பி. வேலுமணி – சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்
  18. டி.கே.எம். சின்னையா – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  19. எம்.சி. சம்பத் – ஊரக தொழில்துறை அமைச்சர்
  20. பி. தங்கமணி – வருவாய்த்துறை அமைச்சர்
  21. ஜி. செந்தமிழன் – செய்தித்துறை அமைச்சர்
  22. எஸ். கோகுல இந்திரா – வணிக வரித்துறை அமைச்சர்
  23. செல்வி ராமஜெயம் – சமூகநலத்துறை அமைச்சர்
  24. பி.வி. ராமண்ணா – கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்
  25. ஆர்.பி. உதயகுமார் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
  26. என். சுப்பிரமணியன் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
  27. வி. செந்தில் பாலாஜி – போக்குவரத்துத்துறை அமைச்சர்
  28. என். மரியம் பிச்சை – சுற்றுச்சூழல் அமைச்சர்
  29. கே.ஏ. ஜெயபால் – மீன்வளத்துறை அமைச்சர்
  30. இ. சுப்பையா – சட்டத்துறை அமைச்சர்
  31. புதிசந்திரன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
  32. எஸ்.டி. செல்லபாண்டியன் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
  33. வி.எஸ். விஜய் – சுகாதாரத்துறை அமைச்சர்
  34. என்.ஆர். சிவபதி – விளையாட்டுத்துறை அமைச்சர்

02 May 2011

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா தீவிரவாத தலைவன் பின்லேடன் குண்டுவீசி கொலை

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியாக கருதப்பட்டவர் ஒசாமா பின்லேடன்.
சவூதி அரேபியாவில் பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர், அல்கொய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை தோற்றுவித்து உலகம் முழுவதும் மாபெரும் தற்கொலை தாக்குதல்களை நடத்தி வந்தான்.
2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி பின்லேடனின் உத்தரவின் பேரில் அல்கொய்தா தீவிரவாதிகள் 19 பேர், 5 விமானங்களை கடத்தி தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டனர். அதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோத வந்த ஒரு விமானத்தின் முயற்சி மட்டும் தோல்வியில் முடிந்தது. மற்ற 4 விமானங்களும் கட்டிடங்களில் மோத செய்யப்பட்டன.
நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் இரு கோபுரங்கள் மீது 2 விமானங்கள் அடுத்தடுத்து வந்து மோதின. தொலைக்காட்சியில் இந்த காட்சிகளை நேரில் பார்த்த உலக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா, இந்த தாக்குதல்களால் நிலைகுலைந்து போனது. 2973 பேர் பலி தற்கொலை தாக்குதலுக்கு கடத்தப்பட்ட 4 விமானங்களில் இருந்த 246 பேர் பலியானார்கள். இரட்டை கோபுரங்களில் இருந்தவர் களில் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். அதோடு உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் எரிந்து நொறுங்கி விழுந்து அழிந்தன.
இதையடுத்து அமெரிக்கா ஆவேச பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் ஜூனியர் புஷ் உத்தரவின் பேரில் அமெரிக்காவின் அனைத்து படை பிரிவுகளும் அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருந்த ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தின.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதரவுடன் நடந்து வந்த ஆட்சி விரட்டப்பட்டது. இதனால் பின்லேடனும், அவரது அல்கொய்தா தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள மலைக்காடுகளில் ஊடுருவி பதுங்கினார்கள். அவர்களை அழிக்க அமெரிக்காவின் அதிநவீனப் படைகள் களத்தில் இறக்கி விடப்பட்டன.
பாகிஸ்தான் - ஆப்கா னிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடி மக்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் பல்வேறு சவால்களை அமெரிக்க படைகள் சந்திக்க வேண்டியதிருந்தது.
பின்லேடன் பல தடவை தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த போதும், அமெரிக்க படைகளிடம் சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான்.
பின்லேடன் தலைக்கு 25 மில்லியன் பவுண்டு பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும் அமெரிக்க ராணுவம் கடந்த 10 ஆண்டுகளாக மனம் தளராமல் அவனைத் தேடி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பின்லேடன் தொடர்பாக அமெரிக்க உளவுப் படைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன் மூலம் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள பல நகரங்களுக்கு ரகசியமாக வந்து செல்வது தெரிய வந்தது.
நேற்று முன்தினம் பின்லேடன் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தின் புறநகரில் உள்ள ஒரு விடுதியில் வேறு பெயரில் வந்து தங்கி இருப்பது அமெரிக்க உளவுப் படையினருக்கு தெரிய வந்தது. அவர்கள் பின்லேடனை உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர்.
இதற்காக அந்த விடுதியை சுற்றி உளவுப் படையினரை நிறுத்தினார்கள். இது பின்லேடன் கூட்டாளிகளுக்கு தெரிந்து விட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டான்.
துப்பாக்கி சண்டை ஓய்ந்ததும் அந்த விடுதிக்குள் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். பின்லேடனின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். தற்போது அவனது உடல் அமெரிக்காவில் பாதுகாப்பு படை வசம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மிக முக்கிய போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்து உள்ளதாக கூறினார்.
 பின்லேடன் கொல்லப்பட்ட தகவலை உறுதி செய்த அமெரிக்க அதிகாரிகள் அது தொடர்பான வேறு எந்த தகவல்களையும் வெளியிட மறுத்து விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் அமெரிக்கா முழுவதும் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது. வெள்ளை மாளிகை உள்பட முக்கிய நகரங்களில் திரண்ட அமெரிக்க மக்கள் உற்சாகத்துடன் யு.எஸ்.ஏ., யு.எஸ்.ஏ., என்று கோஷமிட்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் அமெரிக்கர்கள் விழாக்கோலமாக உள்ளனர். 
Source
www.maalaimalar.com/2011/05/02085922/bin-laden-killed-by-america-ar.html

28 April 2011

நம் தமிழ் ஈழ உறவுகளை காக்க ஒரே அணியில் செயல்படுவோம் வாருங்கள்


இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலையை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில்

கலைஞர்
தனி ஈழமே திமுகவின் குறிக்கோள், போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்

ஜெயலலிதா
ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக மஹிந்தா ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

வைகோ
லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும்

ராமதாஸ்
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினையிலிருந்து இந்தியா தங்களை காப்பாற்றி விடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீராபழி ஏற்பட்டு விடும். தமிழர்கள் நலனிலும், இலங்கையை தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவு களையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்.

திருமாவளவன்
 இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.

விஜயகாந்த்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள அதிபர் ராஜபக்சேயையும், அவரது ராணுவமும் போர் குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டி ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்போதே ஆதரவளிக்க வேண்டும்

கிருஷ்ணசாமி
ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த நீதிமன்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை புரியவேண்டும்.

28 January 2010

அதிமுகவுக்கு என்றும் வயது பதினாறுதான்

அதிமுகவினர் குடும்பங்களை சேர்ந்த 6 ஜோடிகளுக்கு, நேற்று காலை 11 மணியளவில் சென்னை வானகரத்தில் திருமணம் நடந்தது. இந்த 6 திருமணங்களையும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு நான் சென்றபோது, ‘என்னதான் நடக்கும்’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி காட்டி, ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று முடித்தேன்.
நான் அவையில் இருந்து வெளியேறியதும், முதல்வர் கருணாநிதி, தன்னையே தலைவன் என்று எம்ஜிஆர் பாடியதாக குறிப்பிட்டார். ஆனால், எம்ஜிஆர் அன்று குறிப்பிட்டது அண்ணாவைத்தான்.
அதே நேரத்தில், ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் எம்ஜிஆர் என்னுடன் நடித்தபோது, ‘திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ’ என்று என்னை அப்போதே தலைவி என்று குறிப்பிட்டு எம்ஜிஆர் அன்றே பாடினார்.
அதிமுகவுக்கு என்றும் வயது பதினாறுதான். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவே முடியாது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
விழாவில், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்றார். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வடசென்னை மாவட்டச் செயலாளர் சேகர்பாபு நன்றி கூறினார்.

12 January 2010

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தை அமைக்க பிரான்ஸ் திட்டம்

உள்நாட்டிலும், அனைத்துலகிலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நீதிமன்றம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் கடந்த புதன்கிழமை (6) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கான தண்டணைகளை வழங்கும் பொருட்டு நீதிமன்றம் ஒன்றையும், நீதியாளர் குழு ஒன்றையும் அமைப்பதற்கு பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் இந்த முடிவு பிரான்ஸ் இற்கும் சிறீலங்கா போன்ற போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாடுகளிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தலாம். சிறீலங்கா அரசின் மீது இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் பிரித்தானியா இந்த நடைமுறைகளை கொண்டுள்ளது. பிரித்தானியா அரசு உலகில் நடைபெறும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய முடியும்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்ரேலிய அரசு காசா பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 1,400 பலஸ்த்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் உட்பட பல படை அதிகாரிகள் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

பிரித்தானியாவின் சட்டங்களை போலல்லாது, தமது நாட்டுக்கு வெளியிலும் விசாரணைகளை மேற்கொண்டு தண்டணைகளை வழங்கும் திட்டத்தை பிரான்ஸ் நடைமுறைப்படுத்த உள்ளது.

பிரான்ஸ் மனித உரிமைகளின் தாயகம். எனவே இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றை மேற்கொள்பவர்களை நாம் பாதுகாக்கப்போவதில்லை என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் மற்றும் நீதி அமைச்சர் மைகேல் அலியட் மரியோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றங்கள் மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரான்ஸ் இன் இந்த அறிவித்தலை பிரான்ஸில் உள்ள தமிழ் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் அமைப்புக்களின் உதவியுடன் தகவல்களை திரட்டி எதிர்வரும் வாரம் டப்பிளின் நகரில் நடைபெறவுள்ள போர்க்குற்ற விசாரணைகளின் போது சமர்ப்பிப்பதற்கு தாம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

07 January 2010

நெக்சஸ் ஒன் | செல்போன் விற்பனையில் இறங்கியது கூகுள்!

வாஷிங்டன் : அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போனை நெக்சஸ் ஒன் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இணையதள தேடுதல் வசதியை வழங்கும் முன்னணி நிறுவனம் கூகுள். அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய நெக்சஸ் ஒன் என்ற அதிநவீன செல்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செல்போன், இ&மெயில், பிரவுசிங், டவுன்லோடு என கம்ப்யூட்டர் போலவே செயல்படும் திறன் வாய்ந்தது. இதை கூகுள் நிறுவனமே இணையதளத்தின் மூலம் நேரடியாக ஆன்லைனில் விற்பனை செய்கிறது. ஐ போன், பிளாக்பெரி உள்ளிட்ட அதிநவீன செல்போன்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஜெர்மனியை சேர்ந்த டாய்ட்ஸ் டெலகாம் நிறுவனத்தின் டி மொபைல் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டி மொபைல் இணைப்புடன் ரூ.8,200க்கு கிடைக்கிறது. மற்றபடி இதன் விலை ரூ.24,400.
அதிவேக இன்டர்நெட் தேடுதல், 3.7 இஞ்ச் டச் ஸ்கிரீன், வீடியோகேம், 5 மெகாபிச்சல் கேமரா, வைபி கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த செல்போல் ஆண்ட்ராய்டு 2.1 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கூகுள் நிறுவனம் உருவாக்கிய இந்த சிஸ்டம்தான், மோட்டரோலா, சாம்சங் உள்ளிட்ட 12 முன்னணி நிறுவனங்களின் அதிநவீன செல்போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இது 11.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இதன் எடை வெறும் 130 கிராம்தான்.
இதுபோன்ற செல்போனை ஆப்பிள் நிறுவனம் �ஐபோன்Õ என்ற பெயரில் ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதில் அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும், கூகுள் தேடல் வசதியை வழங்கவில்லை. இதனால், தன்னுடைய சந்தை மதிப்பு மற்றும் விளம்பர வருவாயை தக்க வைத்துக் கொள்ளவும் இன்டர்நெட் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கவும் கூகுள் நிறுவனம் இந்த செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

05 January 2010

சாப்பிட்ட உடன் `செக்ஸ்' வைத்துக் கொள்ளலாமா?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. சிலர் `மூட்' வந்து செக்ஸ் வைத்துக்கொள்வதும் உண்டு.

இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.

அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் மூச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ... எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

இன்னொரு முக்கியமான விஷயம்... சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.

பெண்கள் தொடும்போது `சிலிர்ப்பு' ஏற்படுவது ஏன்?


பெண்கள் தொட்டால் பூ மட்டுமல்ல; ஆண்களின் உள்ளமும் மலர்கிறது. அது ஏன் என்று ஆன்டரியாவில் உள்ள மெஸ்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

இந்த ஆராய்ச்சியில் 100 கல்லூரி மாணவிகள் உட்படுத்தப்பட்டனர். அவர்களை, சில ஆண்களை தொட வைத்து, அந்த ஆண்களுக்குள் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்றும் அப்போது சோதிக்கப்பட்டது. மேலும், அந்த மாணவிகள் தங்களை தொட்ட மாத்திரத்தில் அத்தனை ஆண்களும் சிலிர்த்துப் போனார்கள். சில ஆண்களின் ரோமங்கள்கூட சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்றன.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவிகளின் கை விரல்களில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று துருவித் துருவி ஆராய்ந்தார், ஆய்வை மேற்கொண்ட நரம்பியல் நிபுணர் டேனியல் கோல்டுரிக்.

அப்போது, பெண்களின் விரல் நுனியில் அந்த `சிலிர்ப்பு' ரகசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரணமாக பெண்களின் விரல் நுனியானது ஆண்களின் விரலை விட மிக மென்மையாகவும், குட்டையாகவும் இருக்கிறது. இதனால்தான் இவர்கள் ஒரு ஆணைத் தொடும்போது, அந்த ஆணுக்கு திடீர் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இந்த ஆய்வில் பெண்களுடன் பங்கேற்ற ஆண்கள் கருத்து தெரிவிக்கும்போது அவர்களில் பலர் வெட்கத்தால் நெளிந்து போனார்கள். சிலர், அந்த மாணவிகள் தங்களை தொட்டபோது செக்ஸ் உணர்வு ஏற்பட்டதாக வெளிப்படையாகவே சொன்னார்கள்.

தூங்கும்போது கணவனுக்கு தீ வைத்த இளம்பெண் கைது

கருவாட்டுக் குழம்பு தகராறில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள நெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(28). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி (26). தனியார் ஏற்றுமதி நிறுவன தொழிலாளி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 2ம் தேதி வளர்மதி வேலைக்கு சென்று விட்டு இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பினார். நாளைக்கு வயலில் வேலை இருப்பதால் கம்பெனிக்கு செல்ல வேண்டாம் என கோபால் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த நாய் கருவாட்டுக் குழம்பை கொட்டி விட்டது. கோபால் ஆத்திரமடைந்தார். மகள் கவுசல்யாவை (9) அடித்தார். குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என வளர்மதி கண்டித்தார். வாய்த் தகராறு உச்சக்கட்டம் அடைந்தது. இரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் கோபால் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் வளர்மதி. லுங்கியில் தீப்பிடித்ததும் கோபால் அலறியடித்து எழுந்தார். மீதமுள்ள மண்எண்ணெய்யையும் ஊற்றியதால், அவரது முகம், உடல், வயிறு கருகியது. தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் இதை தெரிவித் துள்ளார். வளர்மதியை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

27 December 2009

இளம்பெண்ணோடு ஆந்திரா கவர்னர் உல்லாசம்?

ஐதராபாத் : ராஜ்பவனில் இளம்பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி நேற்று ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜார்கண்ட் ஆளுநர் சங்கர நாராயணனிடம் ஆந்திர மாநில பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி (86), ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் வசிக்கிறார். இவர் மூன்று இளம் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை தனியார் தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று நேற்று முன்தினம் ஒளிபரப்பியது. அதில், அந்த இளம் பெண்கள் திவாரிக்கு மசாஜ் செய்வது, முத்தமிடுவது மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திவாரியின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளுநர் பதவியின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்திய திவாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டம் வெடித்தது. ஆந்திரா முழுவதும் பெண்கள் அமைப்பினர் திவாரியின் உருவ பொம்மையை நேற்று எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உயர் நீதிமன்றம் தடை: திவாரி சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகளை தெலுங்கு சேனல் ஒளிபரப்பியதும், அதற்கு தடை விதிக்கும்படி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை அதிகாரி ஆரியேந்திர சர்மா மனு தாக்கல் செய்தார். இதை பொதுநலன் வழக்காக ஏற்ற நீதிமன்றம், அந்த ஒளிபரப்புக்கு தடை விதித்தது. இதையடுத்து, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தெலுங்கு சேனல் மனு தாக்கல் செய்துள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் அனில் ரமேஷ், நாகார்ஜுன ரெட்டி ஆகியோர், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

போலீசில் வக்கீல் புகார்: இந்த பாலியல் லீலை தொடர்பாக திவாரி மீது பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற மூத்த வக்கீல் வி.வி. லட்சுமி நாராயணா புகார் கொடுத்துள்ளார். அதில், ஆளுநர் பதவிக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்திய திவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் மீது போலீசார் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அறிக்கை அனுப்ப உத்தரவு:
இதற்கிடையே, திவாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி உடனே அறிக்கை அனுப்பும்படி ஆந்திர அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. அதன் பேரில், மாநில அரசு உடனடியாக அறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு ஆளுநர் திவாரிக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து, அரை மணி நேரத்தில் திவாரி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.

அதில், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி கூறியுள்ளார்.
அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சங்கர நாராயணனிடம் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக அளித்தார். அவர் இன்று புதிய பொறுப்பை ஏற்கிறார்.

26 December 2009

அதிகாலை 2 மணிவரை மதுச்சாலையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியுடன் இந்தியாவில் நடந்துவரும் ஒருநாள் போட்டிகளில் கோட்டைவிடும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மதுச்சாலைகளில் விடிய விடிய தமது நேரத்தைச் செலவு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்னர் அவர்கள் எங்கு சென்றாலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இப்போது இந்தியா கொல்கத்தாவிலும் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல் மற்றும் போட்டி நடக்கும் ஈடன்கார்டன் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நள்ளிரவில் கேளிக்கைக் கூடங்களுக்குச் சென்று குடித்து கும்மாளமிட்டுவிட்டு திரும்பியது தெரியவந்துள்ளது.

இலங்கை அணியின் மூத்த வீரர் சனத் ஜெயசூர்யா, திலகரட்ண டில்ஷான் உள்பட 7 வீரர்கள் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11 மணி அளவில் போலீசுக்கு தெரிவிக்காமல் எந்த பாதுகாப்பும் இன்றி ஹோட்டலை விட்டு கிளம்பி உள்ளனர். இதில் 5 பேர் சீக்கிரம் திரும்பி விட்டனராம். ஆனால் ஜெயசூர்யாவும், டில்ஷானும் தமது கேளிக்கைகளில் மெய்மறந்து இருந்து விட்டு அதிகாலை 2 மணிக்கு தான் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்கள். எனவே இது போலீசாருக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் கூறும் போது, `இது பாதுகாப்பு தவறு தான். அதற்கு காரணம் நாங்கள் அல்ல. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தான். ஹோட்டலை விட்டு வெளியே சொல்லக்கூடாது என்று இலங்கை அணி வீரர்களுக்கு நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். அப்படி இருந்தும் அவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறி நடந்துள்ளனர். மேலும் மீண்டும் இது போன்று நடக்கக்கூடாது என்று இரு அணியினரையும் அறிவுறுத்தி இருக்கிறோம்' என்றார்.

22 December 2009

அதிகம் கோபப்படுவது யார்?


"யோவ் பெருசு, காலங்காத்தால உசுர வாங்காத, அந்த மஞ்ச கலர் பாரத்தை நிரப்பிக் குடுத்துட்டு கிளம்பு''. அரசு அலுவலகங்கள், வங்கிகளில் இதுபோன்ற எரிச்சலான வசனங்களை காதுபடவே கேட்கலாம்.

இதுமட்டுமல்ல வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்தால் பெற்றோர் கோபமாகிறார்கள். அப்பா அதட்டினால் பிள்ளைகள் எரிச்சலடைகிறார்கள். மனைவி எதிர்த்துப் பேசினால் கணவன் கோபமாகிறான். அலுவலகத்தில் மேலதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு அடங்க முடியாமல் அடங்கி ஒவ்வொருவரும் கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். இது அன்றாட வாழ்க்கையில் கோபம் காணப்படும் சூழல் கள்.

சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை.

18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள்.

அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம் கொண்டதாகவும், அதற்கேற்ற பழக்கவழக்கம் உடையதாகவும் வளருகிறது. ஆண் களைவிட பெண்களே அதிகம் கோபப்படுகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் பெரும்பாலானவர்கள் பண நெருக்கடியால் அதிகளவு கோப உணர்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட முறையில் பெரும் கோபக்காரராகவும், சமூக அமைப்பில் அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறார்கள்.

இந்த வினோதமான ஆய்வு முடிவுகள், கோபத்தைப் பற்றிய பிரபல புத்தகமான `இன்டர்நேஷனல் ஹேண்ட்புக் ஆப் ஆங்கர்' என்ற நூலின் 4-வது பாகத்தில் வெளிவர இருக்கிறது.

இளைய தலைமுறையை மிரட்டும் ஞாபக மறதி


பொதுவாக வயது ஆக ஆகத்தான் ஒருவருக்கு மூளையின் செயல்பாடு குறையத் தொடங்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் இளம் வயதிலேயே, அதாவது 25-30 வயதிலேயே இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்வது அதிகரித்து வருவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வும் அமெரிக்காவில்தான் நடத்தப்பட்டது. 18 முதல் 60 வயது வரை உள்ள உடல் ஆரோக்கியம் கொண்ட சுமார் 20 ஆயிரம்பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களது நினைவாற்றல், மூளையின் செயல்பாட்டு திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும், புதிர்களை கண்டறிதல், கதைகளில் வரும் நிகழ்வுகளை நினைவு கூர்தல் ஆகிய திறன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் முடிவில், 20 முதல் 30 வயதுள்ள இளைய தலைமுறையினர் சில திறன்களை இழந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஆய்வாளர்கள்.

இந்த கவலையை தெரிவித்த ஆய்வாளர்களுக்கு இன்னொரு ஆறுதலான செய்தியும் ஆய்வின்போது கிடைத்தது. மொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும்போது, கூடவே அதிகரிக்கிறது என்பதுதான் அந்த செய்தி.

ஆபாச படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்ட 2 இன்ஜினியர் கைது


சென்னை :திருமணத்துக்கு மறுத்த பெண்களை பற்றி தவறாக இன்டர்நெட்டில் சித்தரித்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையை சேர்ந்தவர் நிஷா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனாவிடம் அளித்துள்ள புகார்:எனது அண்ணனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக என்னை பற்றி தவறாக சித்தரித்து இ&மெயில் வருகின்றன. எனது போட்டோக்களை இன்டர்நெட்டில் ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். நான் பாலியல் தொழில் செய்யும் பெண் போல சித்தரித்துள்ளனர். நான் இப்போது இங்கிலாந்தில் பணியாற்றுகிறேன். ஆனாலும் பல போன் அழைப்புகள் வருகின்றன.இவ்வாறு அந்தப் புகாரில் நிஷா கூறியுள்ளார்.


இதுகுறித்து எஸ்பி மல்லிகா உத்தரவின்படி, டிஎஸ்பி பாலு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். நிஷாவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்ரீநாத் நம்பூரி (27) என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அவர் தற்போது இங்கிலாந்தில் பணியாற்றுகிறார். திருவான்மியூர் பகுதியில் அவர் வசித்தபோது, அங்குள்ள இன்டர்நெட் மையத்தில் இருந்து மெயில் அனுப்பியது தெரிந்தது.ஸ்ரீநாத் நம்பூரியை அவரது நிறுவனத்தின் உதவியுடன் சென்னைக்கு வரவழைத்து கைது செய்தனர்.

அதேபோல தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெனிபர்(24). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சிபிசிஐடி போலீசில் அளித்துள்ள புகாரில், ��என்னுடைய அண்ணனின் இ&மெயிலுக்கு என்னை பற்றி ஆபாச இமெயில்கள் வருகின்றன. என் இ&மெயில் முகவரியிலும் எனது படத்தை ஆபாசமாக வெளியிட்டுள்ளனர்ÕÕ என்று கூறியிருந்தார்.இது குறித்தும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவருடன் தூத்துக்குடியில் டியூஷன் சென்டரில் படித்த மிதுன் கட்டார் (24) என்பவர் அனுப்பியது தெரிந்தது. இவர், ஷார்ஜாவில் இன்ஜினியராக உள்ளார். அவரையும் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு வரவழைத்து கைது செய்தனர்.இருவருமே திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனது தோழிகளின் படத்தை ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மலேசியாவில் இந்து பூசாரியை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

கோலாலம்பூர்: மலேசியாவில் இந்துக் கோவில் பூசாரியை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். மலேசியாவின் கெலனா ஜெயா என்ற இடத்தில் ஒரு இந்துக் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக இருப்பவர் கனகராஜன் (27). கடந்த இரு ஆண்டுகளாக இங்கு அவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், டிசம்பர் 14ம் தேதி கோவில் நிர்வாகக் கவுன்சில் தலைவரை அணுகி ஊதியத்தை உயர்த்துமாறு கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைவரின் மகன், கனகராஜனை அடித்துள்ளார். பின்னர் அவரது உடைகளை கழற்றிச் சொல்லி அசிங்கப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கனகராஜன் கூறுகையில், பலமுறை ஊதியத்தை உயர்த்துமாறு கோரியும் கூட அதை அவர்கள் கேட்கவில்லை. மேலும், தங்குமிட வசதி சரியில்லை. நல்ல இடமாக தாருங்கள் என்று கேட்டும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. எனக்கு வேலை தந்தபோது பி.எப் உள்ளிட்ட சலுகைகளைத் தருவதாக கூறியிருந்தனர். ஆனால் வேலைக்கு சேர்ந்த பின்னர் எதையும் தரவில்லை.

எனக்கு 600 ரிங்கிட் சம்பளம் மட்டுமே கொடுத்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஒரு ஸ்டோரில் தங்கிக் கொள்ளுமாறும் உத்தரவிட்டனர். சம்பவத்தன்று நான் எனது குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நிர்வாகக் கவுன்சில் தலைவரின் மகன் என்னைத் திட்டி அடித்தார். பின்னர் உடைகளை கழற்றச் சொல்லி அசிங்கப்படுத்தினார். நான் உதவி கோரி குரல் எழுப்பியதும் அங்கு நிறைய பேர் திரண்டு வந்து தலைவரின் மகனிடமிருந்து என்னை மீட்டனர் என்றார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 December 2009

மன்மத குருக்கள்! வெளியில் வராத படங்கள்


காஞ்சிபுரம் மன்மத குருக்கள் விவகாரம்... சில மாதங்களுக்கு முன்பே காவல்துறை யின் கவனத்துக்கு வந்ததும்... அவர்கள் இதை வைத்து பெரிய அளவில் வசூல் நடத்தி இருப்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது.காஞ்சி மன்மத குருக்கள் தேவநாதன் கோயில் கருவறையில் சல்லாபித்த தகவலும் அதை அவன் படம்பிடித்து வைத்திருக்கும் விஷயமும் சில மாதங்களுக்கு முன்பே சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபி மற்றும் அவரது ஸ்டேஷன் காக்கிகளின் கவனத்துக்குப் போயிருக்கிறது.
உடனே துடித்தெழுந்த காக்கிகள்... மன்மத குருக்களை அழைத்து மிரட்டி அவன் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோ படங்களை கேட்ச் பண்ணிவிட்டு.... மன்மத குருக்களை துரத்திவிட்டுவிட்டனர்.
இதன்பின் இந்த படத்தை வைத்து எப்படி ஆதாயம் பார்ப்பது என மூளையைக் கசக்கிக்கொண்ட சிவகாஞ்சி காக்கிகள்... படத்தில் சிக்கியுள்ள பெண்களில் யாராவது வசதியான பார்ட்டிகள் இருக்கிறார்களா என தேடினர்.அந்த கிளுகிளு சி.டி.யில் தென்பட்ட ஒரு முகத்தைப் பார்த்த தும் காக்கிகள் துள் ளிக் குதித்திருக்கிறார் கள். காரணம் அந்த சி.டி.யில் இருந்த முகங்களில் ஒன்று காஞ்சிபுரத்துக்கே அறிமுகமான பிரபல முகம்.
பிரபல டாக்டரின் மனைவி. வசதிக்கும் பஞ்சமில்லாத வர். டாக்டர் அடிக்கடி சென்னை மற்றும் வெளியூர்களுக்கு பறந்த படியே இருக்கும் ரகம். உடனே அந்தப் படத்தை மட்டும் தனியே காப்பி பண்ணிக் கொண்டு டாக்டரையும் அவரது மனைவியையும் சந்தித்த காக்கிகள்...
அவர்களின் மிரட்சியைப் பார்த்து கணிசமாகக் கறந்துகொண்டு கிளம்பினர். இதன் பின் தனது கணவரின் காலில் விழுந்து கதறி மன்னிப்பு கேட்ட அந்தப் பெண்ணை... அதோடு காக்கிகள் விட்டுவிட வில்லை. திரும்பத்திரும்ப வருவதும் அநாகரிகமாகப் பேசுவதும்... கரன்ஸிக் கட்டோடு திரும்புவதுமாக இருந்தனர். இதனால் மனம் வெறுத்துப்போன டாக்டரின் மனைவி... ஒரு கட்டத்தில் விஷம் குடிக்க...
கடைசி நிமிடத்தில் தீவிர சிகிச்சைக்குப் பின் காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீளவில்லை.இதை அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும்...
சரியாக பங்கு கிடைக்காத ஒரு காக்கியே விஷயத்தை கசிய விட்டுவிட்டு சைலண்ட் ஆக... இதைப் பார்த்து நம் லிமிட்டில் இப்படியா என கொதித்துப்போன டி.எஸ்.பி.சமுத்திரக்கனி, வழக்கை பதிவு செய்யவைத்து... விசாரணையையும் தீவிரப்படுத்திவிட்டார். இடையில் நடந்த கலெக்ஷன் விவகாரங்கள் அவர் கவனத்துக்கு வர..
இதன்பிறகே இந்த வழக்கை மாவட்ட குற்றப்பிரிவின் கையில் கொடுத்து விட்டார் டி.எஸ்.பி.தேவநாதனை இரண்டாவது முறை கஸ்டடி எடுத்தபோது அவன் மூலம் செல்போன் ரிப்பேர் கடையில் கைப்பற்றப்பட்ட...
லேப்டாப், மற்றும் தேவநாதனின் செல்போன் ஆகியவற்றை சென்னையில் இருக்கும் தடய அறிவியல்துறைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அவற்றை துருவித் துருவி ஆராய்ந்த தடயத்துறையினர்.... "இவை செல்போன் மூலம் மட்டும் எடுத்த படங்களாகத் தெரியவில்லை. கேமராவைப் பயன்படுத்தியும் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல் தேவநாதனும் பெண்களும் இருக்கும் சில படங்களை மூன்றாம் நபர் ஒருவர் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது' என்றெல்லாம் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.அதோடு... அந்த லேப் டாப் வழியாக தேவநாதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை தேவநாதனின் செல்போன் கடை நண்பர்களான பாலாஜியும் செந்திலும் இதற்காகவே இருக்கும் இணையதளங்களுக்கு அனுப்பி ஏகத்துக்கும் காசு பார்த்ததோடு...
இதற்காகவே தனியாக ஒரு வெப்சைட்டைத் தொடங்கும் முயற்சியிலும் அவர்கள் இருந்ததைக் காக்கிகள் கண்டு பிடித்துள்ளனர். அதேபோல் ஆரம்ப கட்ட விசாரணையின் போது...
காந்திரோடு ஐ.சி.ஐ.சி.ஐ கிளையில் வைத்திருந்த தேவநாதனின் கணக்கில் இருந்து பல லகரங்களையும் முந்தைய விசாரணை டீம் வாங்கியதாகவும் பரபர டாக் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே தேவநாதனின் நெருங்கிய சகாவான கார்த்திக் குருக்கள் மீதும் காக்கிகளின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது.அந்த கார்த்திக் குருக்கள் நம்மிடம் ""அவன் வேதபாட சாலையில் என்னோட படிச்சவன்.
அவ்வளவுதான். எனக்கும் அவனது குற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்கிறார் கைபிசைந்தபடியே.சிவகாஞ்சி காக்கிகளுக்கு வசூல் உண்டியலாகப் பயன்பட்ட அந்த டாக்டர் மனைவி யின் சி.டி.யில் அப்படி என்னதான் இருக்கிறது என விவரமறிந்த காக்கி ஒருவரிடம் கேட்டோம். அவரோ “""தேவநாத குருக்கள் சாதாரண ஆள் இல்லை. அந்த விஷயத்தில் கில்லாடியா இருக்கான். அவன் யாரை ஆபாசப் படம் எடுத்தாலும் அவங்க யாரு என்பதை சிம்பாலிக்கா முதல்ல காட்டுவான்.
உதாரணமா.. பூக்காரியை லாட்ஜ்ல ஆபாசப் படம் எடுக்கும் போது... முதல்ல அவளை கட்டில்ல உட்கார்ந்து பூ கட்ற மாதிரி காட்டிட்டு... அப்புறம்தான் தன் லீலைகளை ஆரம்பிப்பான்.
அதே மாதிரி டாக்டர் மனைவியை... டாக் டர்களுக்கே உரிய கோட்டோடவும் ஸ்டெதஸ்கோப்போடவும் ரொம்ப மரியாதையாகக் காட்டிட்டு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உரிச்சிக் காட்டியிருக்கான்.
இன்னும் வெளில வராத படங்கள் நிறைய இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துடும் பாருங்க'' என்கிறார் மீசையை வருடியபடியே.தற்போதைய காஞ்சிபுரம் டி.எஸ்.பி. விஜயராகவனோ ""விசாரணை தீவிரமா நடந்துக் கிட்டு இருக்கு.
இப்ப எதையுமே சொல்ல முடியாது''’என்கிறார் சஸ்பென்ஸ் வைத்து.தேவநாத குருக்களின் லீலைகள் இன்னும் எப்படி எப்படியெல்லாம் வெளிப்படப் போகிறதோ?

14 December 2009

கொடுங்கோலன் ராஜபக்ச, திருப்பதி வழிபாடு: ஆந்திர முதல்வர் பலி! இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம்: வைணவ துறவி

மனித அரக்கன் மகிந்த ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி கூறியுள்ளார்.

அந்த வைணவ துறவி தெரிவித்திருப்பதாவது:-

உலகின் கொடும் அரக்கன்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச! இந்த அரக்கனுக்கு உதவி செய்த இந்திய பார்ப்பனியம், அமெரிக்க மற்றும் சீனாக்காரர்கள்.

மகிந்த ராஜபக்ச இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார். முதல் முறை வந்தார். இறுதி யுத்தக் கட்ட காலங்களில், ஹெலிகொப்டர் விபத்தில் இறந்து போனார் ஆந்திர முதலமைச்சர்.

இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் மனித அரக்கன் மகிந்த ராஜபக்ச. இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும்.

ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டாம் நடந்தது கிடையாது. அந்த அளவிற்கு மிகப் பெரும் உலகப் பாவி இந்த மகிந்த ராஜபக்ச. தமிழர்களின் எல்லை தெய்வமான ஏழு மலையான் பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதை..அனுமதி வழங்கிய ஆந்திர அரசுக்கு தகுந்த தண்டனையை வழங்கி இருக்கிறது திருப்பதியின் ஏழுமலையான்! இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது என்று கவலை தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.

எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த ராஜபக்‌ஷே நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க தக்க பரிகார பூஜைகள் யாகங்கள் நடத்தப்படவேண்டும். இல்லை என்றால் அந்திர தேசத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அவலமும் அழிவும் ஏற்படும்.

எனவே உண்மையான வைணவர்களும், ஏழுமலையான பக்தர்களும் துரிதமாக செயற்பட்டு திருப்பதி கோவிலில் தீட்டுக் கழிக்கும் பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அந்த வைணவத் துறவி கேட்டுக்கொண்டார்.

10 December 2009

உலகின் பழமையான தொழில் விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக பச்பன் பச்சோ ஆந்தோலன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், ‘‘உலகின் பழமையான தொழிலான விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை’’ என்றார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:விபசாரத்தை சட்டப்படி தடுக்க முடியவில்லை என்றால், அதை ஏன் மத்திய அரசு சட்டமாக்க கூடாது. ஏதோ ஒரு வழியில் விபசாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இத்தொழிலில் சிலர் நவீன முறையில் ஈடுபட்டுள்ளனர். அதை கண்டுபிடிக்க முடியாது. அதனால் விபசாரத்தை மத்திய அரசு ஏன் சட்டபூர்வமாக்க கூடாது? விபசாரத்தை சட்டபூர்வமாக அனுமதித்தால், அந்த தொழிலை கண்காணிக்க முடியும். அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ உதவிகள் அளிக்க முடியும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், ‘‘இந்த விவகாரம் பற்றி ஆலோசனை செய்து முடிவை தெரிவிக்கிறோம்’’ என்றார்.