
சென்னை :திருமணத்துக்கு மறுத்த பெண்களை பற்றி தவறாக இன்டர்நெட்டில் சித்தரித்த கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னையை சேர்ந்தவர் நிஷா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அர்ச்சனாவிடம் அளித்துள்ள புகார்:எனது அண்ணனுக்கு கடந்த 2 ஆண்டுகளாக என்னை பற்றி தவறாக சித்தரித்து இ&மெயில் வருகின்றன. எனது போட்டோக்களை இன்டர்நெட்டில் ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். நான் பாலியல் தொழில் செய்யும் பெண் போல சித்தரித்துள்ளனர். நான் இப்போது இங்கிலாந்தில் பணியாற்றுகிறேன். ஆனாலும் பல போன் அழைப்புகள் வருகின்றன.இவ்வாறு அந்தப் புகாரில் நிஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து எஸ்பி மல்லிகா உத்தரவின்படி, டிஎஸ்பி பாலு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். நிஷாவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்ரீநாத் நம்பூரி (27) என்பவர் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. அவர் தற்போது இங்கிலாந்தில் பணியாற்றுகிறார். திருவான்மியூர் பகுதியில் அவர் வசித்தபோது, அங்குள்ள இன்டர்நெட் மையத்தில் இருந்து மெயில் அனுப்பியது தெரிந்தது.ஸ்ரீநாத் நம்பூரியை அவரது நிறுவனத்தின் உதவியுடன் சென்னைக்கு வரவழைத்து கைது செய்தனர்.
அதேபோல தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெனிபர்(24). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சிபிசிஐடி போலீசில் அளித்துள்ள புகாரில், ��என்னுடைய அண்ணனின் இ&மெயிலுக்கு என்னை பற்றி ஆபாச இமெயில்கள் வருகின்றன. என் இ&மெயில் முகவரியிலும் எனது படத்தை ஆபாசமாக வெளியிட்டுள்ளனர்ÕÕ என்று கூறியிருந்தார்.இது குறித்தும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவருடன் தூத்துக்குடியில் டியூஷன் சென்டரில் படித்த மிதுன் கட்டார் (24) என்பவர் அனுப்பியது தெரிந்தது. இவர், ஷார்ஜாவில் இன்ஜினியராக உள்ளார். அவரையும் சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு வரவழைத்து கைது செய்தனர்.இருவருமே திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனது தோழிகளின் படத்தை ஆபாசமாக வெளியிட்டுள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
1 comment:
நல்ல இருக்குடா உங்க தொழில்நுட்ப வளர்ச்சி. கொஞ்சம் கூட மனிதாபிமானமும், பிறரின் உணர்வுகளை மதிக்கத் தெரியாமலும் வளர்த்துருக்காங்க பாருங்க.
பாவம் பெத்தவுகளுக்கே நீங்க அடங்கலையினா யாரு என்ன செய்ய முடியும்??
Post a Comment