இதுகுறித்து கனகராஜன் கூறுகையில், பலமுறை ஊதியத்தை உயர்த்துமாறு கோரியும் கூட அதை அவர்கள் கேட்கவில்லை. மேலும், தங்குமிட வசதி சரியில்லை. நல்ல இடமாக தாருங்கள் என்று கேட்டும் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை. எனக்கு வேலை தந்தபோது பி.எப் உள்ளிட்ட சலுகைகளைத் தருவதாக கூறியிருந்தனர். ஆனால் வேலைக்கு சேர்ந்த பின்னர் எதையும் தரவில்லை.
எனக்கு 600 ரிங்கிட் சம்பளம் மட்டுமே கொடுத்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள ஒரு ஸ்டோரில் தங்கிக் கொள்ளுமாறும் உத்தரவிட்டனர். சம்பவத்தன்று நான் எனது குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நிர்வாகக் கவுன்சில் தலைவரின் மகன் என்னைத் திட்டி அடித்தார். பின்னர் உடைகளை கழற்றச் சொல்லி அசிங்கப்படுத்தினார். நான் உதவி கோரி குரல் எழுப்பியதும் அங்கு நிறைய பேர் திரண்டு வந்து தலைவரின் மகனிடமிருந்து என்னை மீட்டனர் என்றார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment