Pages

27 December 2009

இளம்பெண்ணோடு ஆந்திரா கவர்னர் உல்லாசம்?

ஐதராபாத் : ராஜ்பவனில் இளம்பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை கூறி ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி நேற்று ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜார்கண்ட் ஆளுநர் சங்கர நாராயணனிடம் ஆந்திர மாநில பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில ஆளுநர் என்.டி. திவாரி (86), ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் வசிக்கிறார். இவர் மூன்று இளம் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை தனியார் தெலுங்கு டி.வி. சேனல் ஒன்று நேற்று முன்தினம் ஒளிபரப்பியது. அதில், அந்த இளம் பெண்கள் திவாரிக்கு மசாஜ் செய்வது, முத்தமிடுவது மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திவாரியின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளுநர் பதவியின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்திய திவாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டம் வெடித்தது. ஆந்திரா முழுவதும் பெண்கள் அமைப்பினர் திவாரியின் உருவ பொம்மையை நேற்று எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உயர் நீதிமன்றம் தடை: திவாரி சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகளை தெலுங்கு சேனல் ஒளிபரப்பியதும், அதற்கு தடை விதிக்கும்படி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் மாளிகை அதிகாரி ஆரியேந்திர சர்மா மனு தாக்கல் செய்தார். இதை பொதுநலன் வழக்காக ஏற்ற நீதிமன்றம், அந்த ஒளிபரப்புக்கு தடை விதித்தது. இதையடுத்து, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இந்த தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தெலுங்கு சேனல் மனு தாக்கல் செய்துள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் அனில் ரமேஷ், நாகார்ஜுன ரெட்டி ஆகியோர், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

போலீசில் வக்கீல் புகார்: இந்த பாலியல் லீலை தொடர்பாக திவாரி மீது பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற மூத்த வக்கீல் வி.வி. லட்சுமி நாராயணா புகார் கொடுத்துள்ளார். அதில், ஆளுநர் பதவிக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்திய திவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் மீது போலீசார் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அறிக்கை அனுப்ப உத்தரவு:
இதற்கிடையே, திவாரி மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி உடனே அறிக்கை அனுப்பும்படி ஆந்திர அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. அதன் பேரில், மாநில அரசு உடனடியாக அறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு ஆளுநர் திவாரிக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து, அரை மணி நேரத்தில் திவாரி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.

அதில், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கும்படி கூறியுள்ளார்.
அதை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சங்கர நாராயணனிடம் ஆந்திர மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக அளித்தார். அவர் இன்று புதிய பொறுப்பை ஏற்கிறார்.

2 comments:

Anonymous said...

He is required to be treated as criminal and given capital panishment.

Anonymous said...

http://southcine.blogspot.com/2009/12/nd-tiwari-sex-scandal-video-nd-tiwari.html

Post a Comment