Pages

28 January 2010

அதிமுகவுக்கு என்றும் வயது பதினாறுதான்

அதிமுகவினர் குடும்பங்களை சேர்ந்த 6 ஜோடிகளுக்கு, நேற்று காலை 11 மணியளவில் சென்னை வானகரத்தில் திருமணம் நடந்தது. இந்த 6 திருமணங்களையும் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
மணமக்களை வாழ்த்தி ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு நான் சென்றபோது, ‘என்னதான் நடக்கும்’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி காட்டி, ‘ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என்று முடித்தேன்.
நான் அவையில் இருந்து வெளியேறியதும், முதல்வர் கருணாநிதி, தன்னையே தலைவன் என்று எம்ஜிஆர் பாடியதாக குறிப்பிட்டார். ஆனால், எம்ஜிஆர் அன்று குறிப்பிட்டது அண்ணாவைத்தான்.
அதே நேரத்தில், ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் எம்ஜிஆர் என்னுடன் நடித்தபோது, ‘திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ’ என்று என்னை அப்போதே தலைவி என்று குறிப்பிட்டு எம்ஜிஆர் அன்றே பாடினார்.
அதிமுகவுக்கு என்றும் வயது பதினாறுதான். இந்த இயக்கத்தை யாராலும் அழிக்கவே முடியாது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
விழாவில், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்றார். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வடசென்னை மாவட்டச் செயலாளர் சேகர்பாபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment