Pages

07 January 2010

நெக்சஸ் ஒன் | செல்போன் விற்பனையில் இறங்கியது கூகுள்!

வாஷிங்டன் : அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போனை நெக்சஸ் ஒன் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இணையதள தேடுதல் வசதியை வழங்கும் முன்னணி நிறுவனம் கூகுள். அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய நெக்சஸ் ஒன் என்ற அதிநவீன செல்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செல்போன், இ&மெயில், பிரவுசிங், டவுன்லோடு என கம்ப்யூட்டர் போலவே செயல்படும் திறன் வாய்ந்தது. இதை கூகுள் நிறுவனமே இணையதளத்தின் மூலம் நேரடியாக ஆன்லைனில் விற்பனை செய்கிறது. ஐ போன், பிளாக்பெரி உள்ளிட்ட அதிநவீன செல்போன்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. ஜெர்மனியை சேர்ந்த டாய்ட்ஸ் டெலகாம் நிறுவனத்தின் டி மொபைல் நிறுவனத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, டி மொபைல் இணைப்புடன் ரூ.8,200க்கு கிடைக்கிறது. மற்றபடி இதன் விலை ரூ.24,400.
அதிவேக இன்டர்நெட் தேடுதல், 3.7 இஞ்ச் டச் ஸ்கிரீன், வீடியோகேம், 5 மெகாபிச்சல் கேமரா, வைபி கனெக்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த செல்போல் ஆண்ட்ராய்டு 2.1 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கூகுள் நிறுவனம் உருவாக்கிய இந்த சிஸ்டம்தான், மோட்டரோலா, சாம்சங் உள்ளிட்ட 12 முன்னணி நிறுவனங்களின் அதிநவீன செல்போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இது 11.5 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட இதன் எடை வெறும் 130 கிராம்தான்.
இதுபோன்ற செல்போனை ஆப்பிள் நிறுவனம் �ஐபோன்Õ என்ற பெயரில் ஓராண்டுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதில் அனைத்து வசதிகளும் இருந்தபோதிலும், கூகுள் தேடல் வசதியை வழங்கவில்லை. இதனால், தன்னுடைய சந்தை மதிப்பு மற்றும் விளம்பர வருவாயை தக்க வைத்துக் கொள்ளவும் இன்டர்நெட் சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கவும் கூகுள் நிறுவனம் இந்த செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

No comments:

Post a Comment