Pages

10 December 2009

உலகின் பழமையான தொழில் விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது? சுப்ரீம் கோர்ட் கேள்வி

விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக பச்பன் பச்சோ ஆந்தோலன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது. நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், ‘‘உலகின் பழமையான தொழிலான விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை’’ என்றார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:விபசாரத்தை சட்டப்படி தடுக்க முடியவில்லை என்றால், அதை ஏன் மத்திய அரசு சட்டமாக்க கூடாது. ஏதோ ஒரு வழியில் விபசாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இத்தொழிலில் சிலர் நவீன முறையில் ஈடுபட்டுள்ளனர். அதை கண்டுபிடிக்க முடியாது. அதனால் விபசாரத்தை மத்திய அரசு ஏன் சட்டபூர்வமாக்க கூடாது? விபசாரத்தை சட்டபூர்வமாக அனுமதித்தால், அந்த தொழிலை கண்காணிக்க முடியும். அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ உதவிகள் அளிக்க முடியும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், ‘‘இந்த விவகாரம் பற்றி ஆலோசனை செய்து முடிவை தெரிவிக்கிறோம்’’ என்றார்.

No comments:

Post a Comment