Pages

28 April 2011

நம் தமிழ் ஈழ உறவுகளை காக்க ஒரே அணியில் செயல்படுவோம் வாருங்கள்


இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலையை உறுதிப்படுத்தி ஐ.நா. அறிக்கை வெளிவந்துள்ள நிலையில்

கலைஞர்
தனி ஈழமே திமுகவின் குறிக்கோள், போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்

ஜெயலலிதா
ஐ.நா. குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக மஹிந்தா ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

வைகோ
லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும்

ராமதாஸ்
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சினையிலிருந்து இந்தியா தங்களை காப்பாற்றி விடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீராபழி ஏற்பட்டு விடும். தமிழர்கள் நலனிலும், இலங்கையை தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவு களையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்.

திருமாவளவன்
 இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கையை விவாதிப்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும்.

விஜயகாந்த்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள அதிபர் ராஜபக்சேயையும், அவரது ராணுவமும் போர் குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டி ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு இப்போதே ஆதரவளிக்க வேண்டும்

கிருஷ்ணசாமி
ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த நீதிமன்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் துணை புரியவேண்டும்.

No comments:

Post a Comment