Pages

04 August 2010

நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

சர்க்கரை நோய் என்று அழைக்கப்படக் கூடிய நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். குறிப்பாக, உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் இந்த பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

அதை சாப்பிடக்கூடாது, இதை சாப்பிடக்கூடாது என்று இந்த சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக கன்டிஷன்கள் போடப்படுகின்றன. அதனாலேயே அவர்களில் பலர் வாழ்க்கை வெறுத்துப் போய்விடுகிறார்கள்.

இவர்கள் என்ன சாப்பிடலாம்?

* தானிய உணவு வகைகளை எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால், இவற்றில் எவற்றையெல்லாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல; அவற்றை எந்த அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

* கூழ் வகைகள் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லதல்ல.

* கோதுமை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் நார்த்தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் - உரிய அளவுகளில் உட்கொண்டு வரலாம். இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதோ, கூழாக தயாரித்து உண்பதோ நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும்போது பருப்பு வகைகளும், கீரை வகைகளும் கலந்த அடைகளாக தயாரித்து உண்ணலாம்.

* அதிகமாக உணவு உட்கொண்டால் இன்சுலினை சுரக்கின்ற கணையம் சோர்வடைந்து விடக்கூடும். அது சோர்வடைந்துவிடக்கூடாது என்பதால் எந்த உணவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் அளவோடு குறைத்து உண்பதே நல்லது.

No comments:

Post a Comment