Pages

16 June 2009

கவுத்துட்டாங்கய்யா கவுத்துட்டாங்க...


உலக கோப்பை டி20 தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா பரிதாபமாக வெளியேறியதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அவரது உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மண்ணைக் கவ்வியது. அடுத்து வாழ்வா? சாவா? என்ற மிக முக்கியமான 2வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் நேற்று முன்தினம் இரவு மோதியது. இந்திய அணியில் இர்பான், ஓஜா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆர்.பி.சிங், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் அதிர்ச்சி தோல்வியால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்தனர்.

டோனிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் என்று பீகார் ரஞ்சி கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த ஒரு அணியும் 100 சதவீதம் வெற்றியை பெற முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா? ஆட்டத்தில் டோனி செயல்பட்ட விதம் சரியல்ல என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா, முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி, முன்னாள் வீரர் சந்திரசேகர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் மதன்லால், தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் சந்துபோர்டே ஆகியோர் தோல்விக்கு டோனியை காரணம் சொல்ல முடியாது என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே ரசிகர்கள்தான் தோனிக்கு கோயில் கட்டினார்கள்

தவறான முடிவுகள்
அபாரமாகப் பந்துவீசி 3 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றிய ஆர்.பி.சிங்குக்கு 4வது ஓவரை தராமால் இஷாந்த் ஷர்மாவை பந்துவீச அழைத்தது. இஷாந்த் தனது 4வது ஓவரில் 13 ரன் விட்டுக் கொடுத்தார்.

அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கும் 3 ஓவர் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. யுவராஜ் 2 ஓவரில் 20 ரன் விட்டுக் கொடுத்தார். இந்த 2 ஓவரையும் ஆர்.பி.சிங் மற்றும் ஜாகீர் கானுக்கு கொடுத்திருக்கலாம்.

உதிரிகளாக இந்திய அணி 16 ரன்களை விட்டுக் கொடுத்தது (இதில் 14 ஒய்டு).

இந்திய அணி பேட்டிங்கின்போது ரோகித், ரெய்னா ஆட்டமிழந்ததும் 4வது வீரராக ரவீந்திர ஜடேஜாவை களமிறக்கியது இமாலயத் தவறாக அமைந்துவிட்டது. பவுன்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அவரது பலவீனத்தை, இங்கிலாந்து வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

டெஸ்ட் போட்டியைப் போல விளையாடிய ஜடேஜா 35 பந்தில் (கிட்டத்தட்ட 6 ஓவர்) 25 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இவருக்கு முன்பாக யுவராஜ் மற்றும் யூசுப் பதானை இறக்கி இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாக இருந்திருக்கும்.

தேவைப்படும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்த நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தும் கேப்டன் டோனி சிக்சர், பவுண்டரி அடிக்க முயற்சிக்காமல் சிங்கிள் தட்டி வெறுப்பேற்றினார்.

No comments:

Post a Comment