Pages

04 May 2009

டுவென்டி20 போட்டிகள் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல - சச்சின்

டுவென்டி20' போட்டிகள் இளைஞர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது கிரிக்கெட் வீரர்களுக்கான விளையாட்டு,'' என்கிறார் சச்சின். கிரிக்கெட் அரங்கில் விறுவிறுவென முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது "டுவென்டி20' போட்டிகள். "இவ்வகை போட்டிகளில் இளம் வீரர்கள் மட்டுமே சாதிக்க முடியும்' என கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் புக்கானன் உட்பட ஒரு சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர். இதற்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சச்சின் கூறியதாவது:

"டுவென்டி20' போட்டிகளில் இளைஞர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என கூறியவர்களுக்கு, கிரிக்கெட் அறிவு அவ்வளவாக இல்லை என்றே கூற வேண்டும். இது கிரிக்கெட் வீரர்களுக்கான விளையாட்டு. இவ்வகை போட்டிகளில் வயது பிரச்னையாக இருக்காது என்பதே எனது கருத்து. மும்பை அணி வீரர் ஜெயசூர்யா (39 வயது), "டுவென்டி20' போட்டிகளில் அசத்தி வருகிறார். அவரது பேட்டிங் நுணுக்கங்கள் வியப்பை அளிக்கிறது. உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களுள் ஜெயசூர்யாவும் ஒருவர். சதம் முக்கியமல்ல: ஒவ்வொரு போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடவில்லை. நான் அணியின் வெற்றிக்காக விளையாடி வருகிறேன். சதத்தை விரட்டி நான் செல்ல வில்லை. அது என் வழியில் வந்தால் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு சச்சின் கூறினார்.

No comments:

Post a Comment