Pages

04 May 2009

6-ந்தேதி சோனியா காந்தி-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்


சென்னை தீவுத்திடலில் வருகிற 6-ந் தேதி மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் முன்னணி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

இதன் இடையே தி.மு.க. அணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட தூரம் பயணம் செய்ததால் கருணாநிதி சோர்வடைந்தார். அவருக்கு தொண்டை வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அவர் தூங்காமல் அவதிப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7.30 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது, காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கருணாநிதியை 2 நாள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் வற்புறுத்தினார்கள்.

No comments:

Post a Comment