Pages

04 May 2009

சிம்பு 3 நாட்கள் தேர்தல் பிரசாரம்


லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 15 நாட்களாக அவர் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார்.

அவருக்கு ஆதரவாக அவருடைய மகன் நடிகர் சிலம்பரசன் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 7-ந் தேதி வரை அவர் கள்ளக்குறிச்சி தொகுதியில், தனது தந்தைக்காக ஓட்டு கேட்கிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய இடங்களில், சிலம்பரசன் பிரசாரம் செய்கிறார்.

நாளை மறுநாள் (புதன்கிழமை) அவர் ஆத்தூர், கெங்கவள்ளி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

7-ந் தேதி, ஏற்காட்டில் பிரசாரம் செய்கிறார்.

அவருக்கு தனி வேன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேனில் சிலம்பரசன் ஊர், ஊராக சென்று தனது தந்தைக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

No comments:

Post a Comment