Pages

03 May 2009

தமிழ் துரோகிகளை தமிழகத்தை விட்டு துரத்த பிரசாரம் - பாரதிராஜா

திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் அமைப்பாளர், இயக்குநர் இமயம் பாரதிராஜா அளித்துள்ள பேட்டி இது..

தமிழர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழர் விரோத சக்தியாக வளர்ந்துள்ள அரசியல் சக்திகளை அடையாளம் காட்டவும் திரையுலகத் தமிழ் இன உணர்வாளர்கள் இன்று ஒன்றுபட்டுள்ளோம்.

எந்தவித அதிகாரப் பங்கீடோ, அரசியல் ஆதாயமோ இல்லாமல், ஓர் இன விழிப்புணர்வை தமிழக மக்களிடம் கொண்டு வரும் நோக்கத்தில், தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

இலங்கையில் போர் நிறுத்தம் என்பது பொய். ஆறு மாத காலமாக தமிழகத்தில் பேரணிகள் உண்ணாவிரதங்கள் மேற்கொண்டும் பல உயிர் பலிகள் கொடுத்தும் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அவர்கள்தான் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு சூழ்நிலைக் கைதியாக உள்ளது. ஆகையால் தமிழின விரோதிகளை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளோம்.

எங்களது பிரச்சாரப் பயணம் நாளை மறுதினம் காஞ்சிபுரத்தில் இருக்கும் அண்ணா சிலையில் துவங்கி, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, கடலூர் எனத் தொடர்ந்து வரும் 11ம் தேதி புதுவையில் முடிவடைகிறது.

இப்பிரச்சாரக் கூட்டத்தில் சீமான், செல்வமணி, சேரன், அமீர், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், சரவணசுப்பையா, செல்வபாரதி, பிரவீன்காந்த், மனோஜ்குமார், நடிகர் வடிவேலு, கவிஞர்கள் அறிவுமதி, கவிஞர் சினேகன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழர்கள் அல்லாத பிற இனத்தவர்களும் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு சோனியா வரும்பட்சத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்..

No comments:

Post a Comment