Pages

22 March 2009

மக்களிடம் மன்னிப்பு கேட்டது - ஐ.பி.எல்


ஐ.பி.எல் சீசன் -2 டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் ஐ.பி.எல், தலைவர் லலித் மோடி , பி.சி.சி.ஐ., தலைவர் சஷாங் மனோகர் , பி.சி.சி.ஐ., அதிகாரிகள் ; ஐ.பி.எல்., உரிமையார்கள் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனையில் மத்திய உள் துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தேர்தலுக்கு இடையூறில்லாமல், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், போட்டியை முழுமையாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை முடிவில் தேர்தலின் போது போட்டிகளை நடத்த முழுமையான பாதுகாப்பு அளிக்க முடியாது என்ற காரணத்தால் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இடம் மாற்றப்பட்டாலும் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என லலித் மோடி கூறினார். இங்கிலாந்து , தென்ஆப்ரிக்கா ஆகிய இரு நாடுகளும் போட்டிகளை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி.எல்., போட்டிகள் மாற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த மோடி, மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார்.

ஐபிஎல் போட்டிகளை தங்ளது நாட்டில் நடத்த தயார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment