Pages

22 March 2009

தனித்து போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு


"வரும் லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., தனித்து போட்டியிடும்' என்று, கோவையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயகாந்த் கூறினார். கோவை மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம், சின்னியம் பாளையம், ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது.

இக்கூட்டத்தில் தே.மு.தி.க., நிறுவனரும், தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது:தமிழக அரசியலில், 14 கட்சிகளையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் கட்சி நம் கட்சியே.


எந்த கட்சியோடும் எந்த உறவும் வைத்துக் கொள்வதில்லை. அதனால், எந்த சமூக பிரச்னையாக இருந்தாலும், நாம் முன்னின்று அப்பிரச்னையைத் தீர்க்க பாடுபட வேண்டும். மாசுபடாத, சுத்தமான அரசியலை செய்ய நான் நினைக்கிறேன். அது முடியும் என்று என் "அகராதி'யில் எழுதப்பட்டுள்ளது."லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள்' என்று பல அரசியல் கட்சியினரும் நம்மை தேடி வருகின்றனர். ஆளுங்கட்சி 10 சீட்டு தருவதாகக் கூறுகிறது; எதிர்க்கட்சியும் 10 சீட்டு தருவதாகக் கூறுகிறது.


லோக்சபா தேர்தல் குறித்து சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில், "தே.மு.தி.க., ஆளுங்கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் 90 சதவீதம் ஓட்டு கிடைக்கும்; எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் 90 சதவீதம் ஓட்டு கிடைக்கும்; தனித்து நின்றால் 70 சதவீதம் ஓட்டு கிடைக்கும்' என்று அந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.அப்படி இருக்கும் போது, நாம் ஏன் போய் மற்றவருடன் கைகோர்த்து கூட்டணி அமைக்க வேண்டும். எனவே, இந்த தேர்தலில் நாம் தனித்தே போட்டியிடுவோம்.


நாம் கட்சி துவங்கிய பின், ஒரு சட்டசபை தேர்தலையும், ஒரு இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளோம். அதேபோல், உள்ளாட்சி தேர்தலையும், உள்ளாட்சி இடைத்தேர்தலையும் சந்தித்துள் ளோம். இதன் மூலம், தமிழகத்தில் நமக்கென்று ஒரு ஓட்டு வங்கி உள்ளது தெளிவாகி உள்ளது. அதை, லோக்சபா தேர்தலில் பயன்படுத்தி, நம் பலத்தைக் காட்ட வேண்டும். கட்சி துவங்கிய பின், எத்தனையோ பிரச்னைகளை நான் சந்தித்துள்ளேன். நமக்குள் ஏற்படும் பிரச்னைகளை கலந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்; உட்கட்சி பூசல்களுக்கு நாம் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒற்றுமையாக இருந்து, மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

சில நாட்களுக்கு முன்னால் இதே விஜயகாந்த்

ராமநாதபுர‌‌‌ம் மாவ‌ட்ட‌ம் அரண்மனை‌யி‌ல் நட‌ந்த க‌ட்‌சி‌‌யி‌ன் பொதுக்கூட்ட‌த்‌தி‌‌ல் அவ‌ர் பேசுகை‌யி‌ல், இலங்கையில் 2 கோடி தமிழர்களுக்கு பதில் தற்போது 30 லட்சம் பேரே உள்ளனர். இலங்கை பிரச்சனைக்கு ஒரே நிரந்தர தீர்வு ஆறரை கோடி தமிழக மக்களும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவேண்டும்.


இணைப்பு 23-03-2009
'நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டளியுங்கள். வரும் 26ம் தேதி தெளிவான முடிவை அறிவிக்கிறேன்' காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்

4 comments:

Anonymous said...

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு !!!
கேப்டன் பேச்ச நம்ப இனியும் நாங்கள் தயார் இல்லை !!!

செவ்வானம் said...

அப்படி சொல்லிட முடியாது வளர்ப்பு தமிழன். . .அன்றைய கால கட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.அதற்காக நான் விஜயகாந்திற்கு ஜால்ரா அடிப்பதாக நினைக்க வேண்டாம்.
இலங்கை பிரச்சனையில் கேவலமான நாடகம் நடத்தும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்,அதிமுக விடம் இருந்து விலகி வந்ததற்காக நாம் விஜயகாந்தை பாராட்டியே ஆக வேண்டும்.

Anonymous said...

//இலங்கை பிரச்சனையில் கேவலமான நாடகம் நடத்தும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்,அதிமுக விடம் இருந்து விலகி வந்ததற்காக நாம் விஜயகாந்தை பாராட்டியே ஆக வேண்டும்.//


well said

Unknown said...

விஜயகாந்த் தனித்து போட்டியிட்டாலும் கூட்டணி அம்மைத்து போட்டியிட்டாலும் லாபம் அவருக்கே . அவர் மக்களுக்காக தனித்து நிற்கவில்லை தனித்து நின்றால் வெற்றி கிடைக்காது என்பது அவருக்கும் தெரியும். வெற்றி கிடைக்காவிட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்தால் தனித்தோ கூட்டணிக்கோ அவர் ரெடி அவர் மனதில் ஓடுவது லாபக்கணக்கு ........................!

Post a Comment