09 April 2009

டெஸ்ட் தரவரிசை: காம்பீர் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரபால் 901 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். யூனுஸ்கான் (பாகிஸ்தான்) 2-வது இடத்திலும், சங்ககரா (இலங்கை) 3-வது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 445 ரன்கள் குவித்து முத்திரை பதித்த காம்பீர் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தெண்டுல்கர் 14-வது இடத்தில் உள்ளார். ஷேவாக் 17-வது இடத்தில் இருந்து 20-வது இடத்துக்கும், லட்சுமண் 15-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கும் பின்தங்கி உள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை வீரர் முரளீதரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஸ்டெய்ன் (தென்ஆப்பிரிக்கா) 2-வது இடத்திலும், ஜான்சன் (ஆஸ்திரேலியா) 3-வது இடத் திலும் உள்ளனர். இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 6-வது இடத்தில் உள்ளார். ஜாகீர்கான் 14-வது இடத்தில் இருந்து 12-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

No comments:

Post a Comment