Pages

25 March 2009

இந்திய கிரிக்கெட்டின் எழுச்சி - சச்சின் மகிழ்ச்சி


கடந்த சில ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் எழுச்சிமிகு காலமாக விளங்கி வருவதாக சச்சின் டெண்டுல்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய அணி வெற்றி அணியாக விளங்குவதாக அவர் உற்சாகத்தோடு கூறியுள்ளார். இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நேப்பியர் பார்க்கில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னுடைய 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 2, 3 ஆண்டுகள் போல எழுச்சிமிகுந்த காலத்தை நான் பார்த்ததில்லை.

இந்திய அணி வெற்றி அணியாக விளங்கி வருகிறது. நானும் திராவிட்டும் இதில் அங்கம் வகிப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். நிச்சயமாக இது இந்திய அணிக்கு உற்சாகமான காலம்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது மிகவும் விசேஷமானது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடும் போது சிறப்பாக விளையாடிவ ருகிறது. இந்த சாதனை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக ஆடிவருவதே இதற்கு காரணம். வெளிநாடுகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கான ஆரம்பமாக 2001-ம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி அமைந்தது.

அதன் பிறகு வெஸ்ட் இண்டீசில் வெற்றிபெற்றோம். தொடர்ந்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாகை சூடியுள்ளோம்.

எல்லா நாடுகளிலும் இந்திய அணி முத்திரைபதித்துள்ளது. இதைத்தான் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடிந்தது திருப்தியை அளிக்கிறது.

தற்போதைய தொடர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த தொடரை வெல்ல முடிந்தால் இன்னும் கூட சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாடு களுக்கு மாற்றப்பட்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், இந்த போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெற்றி ருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற இருப்பதால் இந்திய வீரர்கள் போட்டி நடைபெறும் காலத்தில் குடும்பத்தினரை பிரிந்திருக்க நேரும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

No comments:

Post a Comment