Pages

02 November 2009

`பிரிஜ்'ஜில் விளையும் காய்கறி


குளிர் சாதன பெட்டிகள் (பிரிஜ்) காய்கறிகள், உணவுப் பண்டங்களை பதப்படுத்தி வைக்க பயன்படுகிறது. தற்போது இதில் கால மாற்றத்துக்கேற்ப நவீனத்தை புகுத்தி சமையலுக்கு தேவையான காய்கறிகளை வளர்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. காய்கறிகளை மட்டுமல்லாமல் கடல் உணவுப் பொருட்களான மீன், நண்டுகளையும் வளர்க்க முடியும்.

இந்த பிரிஜ் பல அடுக்குகளை கொண்டதாக இருக்கும். மேற்புறத்தில் உள்ள அடுக்குகளில் காய்கறிகளை வளர்த்துக் கொள்ளலாம். அதற்கு தேவையான வெப்பம் கிடைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. அடிப்பகுதியில் உள்ள அடுக்கில் மீன்களை வளர்க்கலாம். மேலுள்ள தாவரங்கள் வளர்க்கும் அடுக்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கீழே வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் மீன்களின் உணவுக்கு கவலைப்படத் தேவையில்லை. மேலும் பயன்படுத்தியதுபோக உள்ள காய்கறி கழிவுகளையும் இதில் போட்டு வைத்தால் அதில் இருந்து எரிபொருளும் தயாரிக்கவும் முடியும். இதைக் கொண்டு ஒரு காரை இயக்க முடியுமாம்.

இந்த பிரிஜ்ஜின் பெயர் `ப்ருகல் பிரிஜ்'. பிலிப்ஸ் நிறுவனம் இதை தயாரித்து உள்ளது. இனி நமக்கு தேவையான காய்கறிகளை வீட்டுத் தோட்டத்துக்கு பதிலாக சமையல் அறையிலேயே வளர்த்துக் கொள்ளலாம். இதனால் ஆரோக்கியமான காய்கறிகளையும், உணவுப் பொருட்களையும் நேரடியாகப் பெறலாம்.

மாறி வரும் வாழ்க்கை முறையில் வருங்காலத்தில் இது எல்லோர் வீட்டிலும் அத்தியாவசியமாகிவிடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment