Pages

27 October 2009

கருவுற்ற பெண்ணுக்கு ஆலோசனைகள்


இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11 லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் (Maternal Serum Screening)

கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் (First Trimester Screening) சோதனையும், 1521 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் (Triple Screening test) சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் (Carrier Screening) சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.

No comments:

Post a Comment