Pages

01 October 2009

மதுபானங்கள் விலை உயர்வு - மது பிரியர்கள் அதிர்ச்சி


தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. ஒரு ரூபாய் முதல் ரூ.4 வரை விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் மதுபான விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 6 ஆயிரத்து 326 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பீர், விஸ்கி, ரம், ஜின், பிராந்தி என்று பல மதுவகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் விலை சிறிது உயர்த்தப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கும் போது மீதி சில்லறை தரப்படுவதில்லை என்று மது பிரியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் விலைகளை ஒரே சீரான விலைக்கு மாற்ற அரசு முடிவு எடுத்துள்ளது. அதாவது, ஒரு குவார்ட்டர் பிராந்தியின் விலை ரூ.57 என்றால் அதை ரூ.60 ஆகவும், ரூ.63 என்றால் ரூ.65 ஆகவும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி பார்த்தால் மது பாட்டில்களின் விலை ஒரு ரூபாய் முதல் ரூ.4 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

விலை விவரம்

தற்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் குவார்ட்டர் பாட்டில் மது வகைகளின் விலை விவரமும் உயர்த்தப்படும் விலை விவரமும் வருமாறு:-

காஸ்மோபாலிடன் விஸ்கி ரூ.68-லிருந்து ரூ.70 ஆகவும், சிக்னேச்சர் விஸ்கி ரூ.129-லிருந்து ரூ.130 ஆகவும், மெக்டவல்ஸ் கிளப் ரம் ரூ.71-லிருந்து ரூ.75 ஆகவும், மெக்டவல் பிராந்தி 67-லிருந்து 70 ஆகவும், மெக்லீன் பிராந்தி ரூ.58-லிருந்து ரூ.60 ஆகவும், கோல்டன் ஈகிள் டாக்டர் பிராந்தி ரூ.59-லிருந்து ரூ.60 ஆகவும், கார்டினல் பிராந்தி ரூ.68-லிருந்து ரூ.70 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதே போல், டிரிபிள் கிரவுன் பிராந்தி ரூ.68-லிருந்து ரூ.70-க்கும், மானிட்டர் பிராந்தி ரூ.59-லிருந்து ரூ.60-க்கும், ஹனிபீ பிராந்தி ரூ.67-லிருந்து ரூ.70-க்கும், ஷாட்லூப் பிராந்தி ரூ.58-லிருந்து ரூ.60-க்கும், ராயல் வி.எஸ்.ஓ.பி ரூ.77 லிருந்து ரூ.80 ஆகவும், டைமண்டு டிரிபிள் எக்ஸ் ரம் ரூ.59-லிருந்து ரூ.60 ஆகவும், மானிட்டர் 3டி ரம் ரூ.59-லிருந்து ரூ.60 ஆகவும், எம்.ஜி.எம். ஓட்கா, ஒயிட் ரம் வகைகள் ரூ.68-லிருந்து ரூ.70 ஆகவும், எம்.ஜி.எம். ஆரஞ்ச் வோட்கா, ஆப்பிள் வகைகள் ரூ.69-லிருந்து ரூ.70 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மானிட்டர் ஜின்

ரூ.69-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் பவர் வோட்கா ரூ.70 ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்படும் பேக்பைப்பர் விஸ்கி ரூ.70 ஆகவும், மெக்டவல் விஸ்கி ரூ.69-லிருந்து ரூ.70 ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்படும் அக்கார்டு பிராந்தி ரூ.70 ஆகவும், ஜான்எக்ஸா ரூ.69-லிருந்து 70 ரூபாயாகவும், மானிட்டர் ஜின் ரூ.59-லிருந்து ரூ.60 ஆகவும் இனிமேல் விற்பனை செய்யப்படும்.

விண்டேஜ், ஓல்டு சீக்ரெட், பேக்பைப்பர் கோல்டு, காண்டஸா, சீசர், மெக்டவல் செலிபிரேஷன், நெப்போலியன், மெக்லீன் டிரிபிள் எக்ஸ் ரம், கோல்டன் ஈகிள் டாக்டர் பிராந்தி, ஆக்டிவர் வெண்ணிலா ஓட்கா, விஸ்.ஓ.பி எக்சா டீலக்ஸ் பிரீமியம், டைரக்டர் ஸ்பெஷல், கேப்டன் ரம்-பிராந்தி வகைகள், டே நைட் ஜின்-விஸ்கி வகைகள் ஆகியவற்றின் விலைகளும் ஒரே சீராக மாற்றப்படுவதற்காக விலை உயர்த்தப்படுகின்றன. இந்த விலை உயர்வு மற்ற அளவுகளான 750 மில்லி லிட்டர் (புல்) மற்றும் 375 மில்லி லிட்டர் (ஆப்) ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

இதே போல் பீர் பாட்டில்களின் (650 மில்லி லிட்டர்) விலைகளும் உயருகின்றன. அதன் விவரம் வருமாறு:-

பீர் விலையும் உயர்வு

கிங் பிஷர் ஸ்ட்ராங் பீர் ரூ.66-லிருந்து ரூ.70 ஆகவும், ஓரியன் 6000 ரூ.62-லிருந்து ரூ.65 ஆகவும், கல்யாணி பீர் ரூ.67-லிருந்து ரூ.70 ஆகவும், ஜிங்காரோ பீர் ரூ.66-லிருந்து ரூ.70 ஆகவும், கோல்டன் ஈகிள் பீர் ரூ.59-லிருந்து ரூ.60 ஆகவும் விலை உயருகிறது. இந்த விலை உயர்வு 325 மி.லி. அளவு கொண்ட பீர் பாட்டில்களுக்கும் பொருந்தும்.

மது பிரியர்கள் அதிர்ச்சி

மது பானங்களில் இந்த விலை உயர்வு மது பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக, எழும்பூர் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த இளைஞர் ஒருவர் கூறும்போது, ``மதுபானங்களின் உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் மது வகைகள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகவே விற்கப்பட்டு வருகிறது. கூலித் தொழிலாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருந்த `மினி குவார்ட்டர்' பாட்டிலும் தற்போது விற்பனை செய்யப்படவில்லை'' என்று கூறினார்.

1 comment:

erbalaji said...

இந்த ஒரு ரூபாஉ ரெண்டு ரூபாய் விலையேற்றம் “குடிமகன்”களை எந்த விதத்திலும் பாதிக்காது...

Post a Comment