Pages

24 September 2009

கொள்ளையர்களை தாக்கும் ஏ.டி.எம்.


இது ஒரு விசித்திரமான தயாரிப்பு. வாடிக்கையாளர்கள் சேவையை துரிதப்படுத்தவும், வங்கி வேலைப்பழுவை குறைக்கவும் ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எல்லா நகரங்களிலும் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. மாநகரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து இடங்களிலும் அருகருகே ஏ.டி.எம்.மையங்களை பார்க்கலாம்.

சமீப காலங்களில் திருடர்கள் இந்த ஏ.டி.எம். இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் சென்றுவிடுவதை செய்திகளாக படிக்கிறோம். இதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது, `திருடர்களை தாக்கும் ஏ.டி.எம்'.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள வங்கிகளில் பணிபுரிவதற்கே ஊழியர்கள் மிகவும் பயப்படுகின்றனர். அங்கு வங்கிக் கொள்ளைகள் அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம். கடந்த ஆண்டில் மட்டும் 500 ஏடிஎம்களில் கொள்ளையர்கள் வெடிகுண்டு வைத்துள்ளனர்.

இந்த புதிய ஏ.டி.எம்.மில் இதுபோன்ற கொள்ளைத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. இது எச்சரிக்கை மணியை மட்டும் அடிக்காது. திருப்பித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிடும். இந்த புதிய மிஷினில் யாராவது அதன் மேற்பரப்பை திறக்க முயற்சித்தாலோ அல்லது அதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை கழற்ற முயன்றாலோ அல்லது அந்த இயந்திரத்தில் வெடிகுண்டை பொருத்த முயற்சித்தாலோ உடனடியாக இயந்திரம் அவர்கள் கண்களின் மீது மிளகுப் பொடியை தூவிவிடும். அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவலை அனுப்பிவிடும். கொள்ளையர்கள் உஷாராகுமுன் கைது செய்யப்படுவார்கள். ஏ.டி.எம்.-ஐ இயக்கத் தெரியாமல் நோண்டிக் கொண்டு இருந்தாலும் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டால் 3 வங்கி ஊழியர்கள் விரைந்து வந்து சிகிச்சை செய்வார்கள். திருடர்கள் என்றால் போலீசில் ஒப்படைத்துவிடுவார்கள்.

அப்சா என்ற வங்கி இந்த ஏ.டி.எம்.களை அறிமுகப்படுத்தி உள்ளது. வெற்றிகரமாக செயல்பட்ட இந்த ஏ.டி.எம்.கள் சுற்றுலாத்தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மட்டும் பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து இடங்களுக்கும் கொண்டுவரப்படும் என்று அந்த வங்கி அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment