Pages

19 September 2009

ஒரே ஒரு ஊழியருக்கு ரூ.480 கோடி சம்பளம்


சிட்டி குழுமத்தை சேர்ந்த ஒரு ஊழியருக்கே ரூ.480 கோடியை சம்பளமாகக் கொடுப்பது மிக அதிகம்தான் என்று அதன் தலைமை செயல் அதிகாரி விக்ரம் பண்டிட் தெரிவித்தார். அமெரிக்க பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட வங்கிகளில் சிட்டி குழும வங்கியும் முக்கியமானது. இதற்காக அமெரிக்க அரசிடம் இருந்து ரூ.2.16 லட்சம் கோடி நிதியுதவியை பெற்றுள்ளது.

இந்நிலையில், சிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான பிப்ரோவில் பணியாற்றும் ஆன்ட்ரூ ஹால் என்பவருக்கு ரூ.480 கோடி சம்பளம் தரப்படுகிறது. நியூயார்க்கில் நடந்த நேர்க்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிட்டி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி விக்ரம் பண்டிட், �சிட்டி குழுமம் இப்போதுள்ள நிலையில், ஒரே ஒரு ஊழியருக்கு ரூ.480 கோடி சம்பளம் வழங்கப்படுவது மிக அதிகபட்சம்தான்Õ என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால், சிட்டி குழுமத்தின் முந்தைய நிர்வாகம் அந்த ஊழியருக்கான வேலை ஒப்பந்தத்தை போட்டுள்ளது.

இதனால் தவிர்க்க முடியாமல் இவ்வளவு சம்பளத்தை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இவருக்கு வழங்கப்படும் சம்பள விவரம் மற்றும் குழுமத்தின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பள விவரம் ஆகியவை அதிபர் ஒபாமா நியமித்துள்ள சீராய்வுக்குழுவின் தலைவர் கென்னத் பெயின்பெர்க்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிட்டி குழுமம்

No comments:

Post a Comment