Pages

19 September 2009

தீபாவளி சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்க தென் மவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இவற்றில் பல ரயில்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஏதுவாக சூப்பர் பாஸ்ட் ரயில்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்பு ரயில்கள் விவரம்: மதுரையில் இருந்து அக்டோபர் மாதம் 15ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(வண்டி எண்: 0631) மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.16ம் தேதி இரவு 8.30மணிக்கு புறப்படும் ரயில்(0632) மறுநாள் காலை 7.10 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து அக்டோபர் மாதம் 17ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்:0671) மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.18ம் தேதி இரவு 7.40மணிக்கு புறப்படும் ரயில்(0632) மறுநாள் காலை 5.55 மணிக்கு மதுரை சென்றடையும். அதிவேக(சூப்பர்பாஸ்ட்) எக்ஸ்பிரஸ் ரயில்கான இவை திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகியே ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை வரும் ரயில்கள் கூடுதலாக பெரம்பூரில் நிற்கும். திருச்சியில் இருந்து அக். 18ம் தேதி காலை 8மணிக்கு புறப்படும் சிறப்புரயில்(0617) அன்று பகல் 1.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதிவேக ரயிலான இச்சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து அக்.18ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்புரயில்(0618) மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வாஞ்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில்நிலையங்களில் நிற்கும்.

சென்னை எழும்பூரில் இருந்து அக்.19ம் தேதி மாலை 3.40 மணிக்கு புறப்பும் சிறப்பு ரயில் (0655) மறுநாள் காலை 5.15மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் கூடுதலாக வள்ளியூரில் நிற்கும். நாகர்கோவிலில் இருந்து அக்.20ம் தேதி காலை 8.15மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(0656) அன்று மாலை 3.45 மணிக்கு திருச்சி போய் சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளத்தில் இருந்து அக்.15ம் தேதி மாலை 6.40மணிக்கு சாதாரண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலாக(0635) புறப்பட்டு மறுநாள் காலை 7.40மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.19ம் தேதி அதிவேக சிறப்பு ரயிலாக(0636) காலை 11 மணிக்கு புறப்பட்டு அதேநாள் நள்ளிரவு 11.30மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கோவை, பாலகாடு, திருச்சூர், ஆலவாய், ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். சென்னை வரும் ரயில் பெரம்பூரில் நிற்கும். நாகர்கோவிலில் இருந்து அக்.18ம் தேதி பகல் 12.15மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(0646) மறுநாள் அதிகாலை 3.45மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அக்..19ம் தேதி நண்பகல்12.45மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(0645) மறுநாள் காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.14ம் தேதி இரவு 10.20மணிக்கு புறப்படும் அதிகவேக சிறப்பு ரயில்(0605)மறுநாள்நண்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து அக்.15ம் தேதி அதிவேக சிறப்பு ரயிலாக(0606) இரவு 7.40மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மணியாச்சி, திருநெல்வேலி வள்ளியூர் ஆகிய ரயில்நிலையங்களிலும் சென்னை வரும் ரயில் கூடுதலாக பெரம்பூரிலும் நிற்கும். இந்த தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. இன்று பிற்பகல்களுக்கு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளின் இடங்கள் கணிசமாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாலைக்குள் அனைத்து இடங்களும் பதிவு செய்யப்படும் வாய்ப்பு அதிகம்.

No comments:

Post a Comment