Pages

17 September 2009

ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்ட பெண்


லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த 54 வயதாகும் மேரி சிமோன், என்ற பெண் தான் இதுவரை 1500 ஆண்களுடன் செக்ஸ் உறவு கொண்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் தான் ஆண் நண்பர்களுடன் மற்றும் பிற பெண்களின் கணவன் உட்பட பலரிடம் செக்ஸ் உறவு இருந்து வருகிறேன். ஆனால் தான் செய்வது விபச்சாரம் அல்ல என கூறினார். மேலும் பல ஆண்களக்கு செக்ஸ் பயிற்சி கொடுப்பது சட்டபூர்வமானது என்று கூறிய அவர் மருத்துவ ரீதியாக இதுபோன்று பயிற்சிகள் கொடுப்பது குற்றம் ஆகாது என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

அடுத்தபெண்ணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன்.

இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை.

பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் 'நோயாளிகள்' காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல.

நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

குழந்தை வேண்டும் சில பெண் [^]களுக்கு வேறு சில பெண்கள் [^] வாடகை தாயாக குழந்தை [^] பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன்.

எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன்.

சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன்.

எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன்.

செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

No comments:

Post a Comment