Pages

17 September 2009

சொன்னார்கள்...

தென்கச்சி சுவாமிநாதன்
நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

ஜெ.ஜெயலலிதா
நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மக்களவைச் செயலகத்திற்கு அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக, ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லாப் பூச்சியாகச் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது

அழகிரி
ஜெயலலிதா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் எங்கேயோ மறைந்திருந்து கொண்டு அறிக்கைவிடுகிறார். அவர் இருக்கும் இடத்தை நீங்கள் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும்

தொல்திருமாவளவன்
காங்கிரஸின் அழைப்பை ஆரம்பத்திலேயே புறக்கணித்துவிட்டார் ரஜினிகாந்த் [^]. இல்லாவிட்டால் அவரை தமிழக காங்கிரஸின் பெரிய கோஷ்டிக்குத் தலைவராக்கியிருப்பார்கள்

எஸ்.வி.சேகர்
நடிகர் விஜய் என்ன சொல்லியிருக்கிறார் என்பதே புரியவில்லை. யாருமே தன் மீது கோபப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர் பேசியிருப்பதாகத் தெரிகிறது. ராகுல் அழைத்ததால் தான் அவர் போனார் என்பது நம்பும்படியாக இல்லை. நடிகை சினேகாவைத் தேவையில்லாத அளவுக்கு இந்து அமைப்புகள் சீண்டுகின்றன என்பதே என் கருத்து. கோவிலுக்குள் அவர் செருப்பு அணிந்து செல்லவில்லை; கிரிவலப் பாதையில் தான் சென்றார். எனக்குச் சர்க்கரை வியாதி இருப்பதால் நானே செருப்பு அணிந்து தான் சென்றேன்

No comments:

Post a Comment