Pages

02 October 2009

ரத்ததானம் செய்வதில் தமிழகம் 2வது இடம்


தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கமும், சென்னை மாநகராட்சி எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கமும் இணைந்து, தேசிய தன்னார்வ ரத்ததான நாள் நிகழ்ச்சியை, சென்னையில் நேற்று நடத்தியது. எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார். தமிழகத்தில் 160 முறை ரத்த தானம் செய்த ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.ஏ.கே.பி.ராஜசேகரன் மற்றும் அதிக அளவில் ரத்ததானம் பெற்ற அரசு மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாவில் அதிக அளவில் ரத்ததானம் செய்வதில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.

தமிழகம் முதலிடம் வர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும். 2002ம் ஆண்டு 57 சதவீத அளவு ரத்ததானம் என்று இருந்தது. தற்போது 89 சதவீதமாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இது 100 சதவீதமாக உயரும். ராஜசேகரன் 160 முறை ரத்தம் கொடுத்து இன்று 161 முறையாக ரத்தம் கொடுத்துள்ளார். அவர் மட்டுமல்ல அவரது மகன் 35 தடவையும், மகள் 32 தடவையும் ரத்த தானம் செய்துள்ளனர். நானும் இதுவரை 40 முறை ரத்ததான செய்துள்ளேன். அதாவது, துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியும், முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியும் கண்டிப்பாக ரத்ததானம் செய்கிறேன். இவ்வாறு மேயர் பேசினார். மாநகராட்சி எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சங்க கூடுதல் திட்ட இயக்குனர் டாக்டர் குகானந்தம் நன்றி கூறினார்.

1 comment:

ரவி said...

பெருமையாருக்கு. தமிழ்நாட்ல தான் நிறைய கொசு கூட...

Post a Comment