Pages

06 August 2009

இருமல், காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வறண்டு போதல் போன்ற அறிகுறி உள்ளவர்களா நீங்கள்?


அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிலி, அர்ஜென்டைனா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பன்றி காய்ச்சல் எனப்படும் எச்1என்1 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவிலும் பரவுகிறது. நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் நோயானது எளிதில் மற்றவர்களுக்கும் பரவும் தொற்று நோய் என்பதால் நோய் தாக்கியவர்களை தனி சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் மரணம் ஏற்படும் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஜஹாங்கிர் ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ரீடா ஷேக் (வயது 14) என்ற 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியான முதல் நபர் இவர்தான். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இதை தொடர்ந்து பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. கடந்த இரண்டரை மாதங்களாக விமான நிலையங்களில் 42 லட்சம் பயணிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் 558 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 470 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர்.

பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?
ஸ்வைன் ப்ளூ வைரசால் பன்றிகளின் மூச்சு குழாய், நுரையீரலில் ஏற்படும் நோய் தொற்று காரணமாக ஏற்படும் காய்ச்சல்.

மனிதர்களிடம் இது எப்படி பரவுகிறது?
ஸ்வைன் ப்ளூ வைரசால் பாதிக்கப்பட்ட பன்றியிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. மற்ற ப்ளூ காய்ச்சலை போல பன்றிக் காய்ச்சலும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவிவிடும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் வைரஸ் கிருமி மற்றவர்களை பாதிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், சோர்வு, தலைவலி, தொண்டை புண், இருமல், உடல் வலி, உடல் சில்லிட்டு போதல், குமட்டல், வாந்தி, பசியின்மை, வயிற்று போக்கு.

பன்றி கறி சாப்பிடுவதால் நோய் வருமா?
பன்றி கறி சாப்பிடுவதால் பன்றி காய்ச்சல்வராது. 70 டிகிரி செல்சியல் சூட்டில் பன்றி கறியை சமைத்தால் நோய் வர வாய்ப்பில்லை.

பாதுகாத்து கொள்வது எப்படி?
* காய்ச்சல், இருமலுடன் உள்ள நோயாளிகளின் அருகில் செல்லக் கூடாது.
* கை, கால்களை சோப் போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்.
* பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரை பார்க்கச் சென்றால் வாய், மூக்கை மூடக் கூடிய முக கவசம் அணிய வேண்டும்.
* பன்றி காய்ச்சல் பரவியுள்ள வெளிநாடுகளுக்கோ வெளிமாநிலத்துக்கோ தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment