10 August 2009

இங்கிலாந்து இளம் பெண்களுக்கு பீர் தொப்பைதான் பிடிக்குமாம்

முடிகள் அடர்ந்த மார்பு, அதற்கு கீழே பீர் தந்த பரிசான தொப்பை ஆகியவற்றைப் பெற்றவரா நீங்க...? இனி, காலரை லேசாக தூக்கி விட்டுக் கொண்டு இங்கிலாந்துக்கு நடைபோடலாம். உங்களைத்தான் அங்குள்ள இளம்பெண்கள் அதிகம் விரும்புவதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.



இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஐஸ்கிரீம் நிறுவனம் லயன் பார். அது எப்படிப்பட்ட ஆண்களை இளம்பெண்கள் விரும்புகின்றனர் என்ற அதிமுக்கிய ஆய்வை சமீபத்தில் நடத்தியது. 5,000 பெண்கள் பங்கேற்ற அந்த ஆய்வின் முடிவில் தெரிய வந்த சுவாரசிய விஷயங்கள்:

உயரமான, ஒல்லியான... அமிதாப்பச்சன் ரக ஆசாமிகளை இளம்பெண்கள் விரும்பிய காலம் மலையேறி விட்டது. இப்போது உடலை போர்த்திய கருகரு முடி, பீர் செய்த உபயத்தால் வந்த தொப்பை கொண்ட ஆண்கள்தான் எங்கள் ரியல் மேன் என 20 சதவீத இளம்பெண்கள் தெரிவித்தனர்.

தங்கள் ஆளிடம் லேசாக பீர் வாசனை அடித்தால் ரசிக்க முடிவதாக சொன்ன பெண்கள் 10 சதவீதம். ஆணழகன் கணக்காக இல்லாமல் மார்பில் லேசான சதை போட்டிருப்பது பிடிக்கும் என 10ல் ஒரு பெண்கள் தெரிவித்தனர்.


நம்மூர் கவிஞர்கள் ஏற்கனவே எழுதி விட்டதை நிஜமாக்கும் வகையில் சட்டை, சென்ட் எல்லாவற்றையும் தாண்டி வரும் வியர்வை வாசத்துடன் வலம் வரும் ஆணைப் பிடிக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

தூக்கி வாரி, நெற்றியில் விழும் முடியுடன், பார்ட்டிகளில் பங்கேற்பது, விடுமுறையை அடிக்கடி சூரிய குளியலில் கழிப்பது என காணப்படும் ஆண்களுக்கே அதிக பெண்களின் ஓட்டு கிடைத்துள்ளது.

1 comment:

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் மிக எளிதில் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் விட்ஜெட் இணையுங்கள்.
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net

Post a Comment