Pages

12 August 2009

எடுப்பான `முன்னழகு' எல்லோருக்கும் அவசியமா?


எடுப்பான மார்பகங்கள்தான் ஒரு பெண்ணுக்கு அழகு-கவர்ச்சி என்ற எண்ணம் பலரிடம் ஆழமாக பதிந்துள்ளது. எடுப்பான மார்பகம் அமைந்தால்தான் பாலுறவில் கிளர்ச்சி-திருப்தி அடைய முடியும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

அதன்காரணமாக, எல்லாப் பெண்களுமே தங்களது மார்பகம் அளவில் பெரியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், இந்த ஆசை எல்லாப் பெண்களுக்கும் நிறைவேறி விடுவதில்லை. உண்ணக்கூடிய சத்தான உணவுகள், பரம்பரைத்தன்மை காரணமாக சில பெண்களுக்கு எடுப்பான பெரிய மார்பகம் அமைந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அமைந்து விடுகிறது. மேலும் சிலருக்கோ சிறிய அளவிலேயே அமைகிறது.

பெரிய மார்பகம் கொண்ட பெண்கள், தாங்கள்தான் `முழுமையான' பெண்கள் என்று எண்ண, சிறிய மார்பகம் கொண்டவர்களோ தாழ்வு மனப்பான்மை காரணமாக தங்களது உணர்வுகளை தாங்களே நசுக்கிக் கொள்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மார்பகத்தின் அளவிற்கும், பாலுறவுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

`எடுப்பான மார்பகங்கள்தான் பெண்மைக்கு அடையாளம் என்று சித்தரிப்பது தவறான ஒன்று. மார்பக காம்பின் நுனிப்பகுதியில் உணர்வை அதிகப்படுத்தும் உணர்வு நரம்புகள் பல இணைந்துள்ளன. இவைதான் ஒரு பெண்ணின் உணர்ச்சியை அதிகரிக்குமே தவிர, மார்பகங்களின் அளவுகள் அல்ல' என்று கூறும் மருத்துவர்கள், `பாலுறவின்போது மார்பகங்களை முரட்டுத்தனமாக அழுத்தாமல், அதன் நுனிப்பகுதியை வருடுவதுதான் சிறந்த தூண்டலாகும்' என்றும் அறிவுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment