Pages

26 April 2009

பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷூ வீச முயற்சி

ஆமதாபாத்: பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷு வீச முயற்சி செய்த வாலிபரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

லோக்சபா தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் பிரதமர் மீது ஷு வீசினார். அது மேடைக்கு முன்பாகவே சற்று தொலைவில் விழுந்தது. பின்னர் அந்த மர்ம நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். விசாரனையில் அவர் பொறியியல் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. தலைவர்கள் மீது ஷு வீசுவது தொடர் கதையாகிறது.

1 comment:

தீபக் வாசுதேவன் said...

இது அருவருக்கத் தக்க செயல் மட்டும் அல்ல, சட்டப்படி குற்றமும் கூட. எனது பதிவில் இதைப் பற்றி எழுதியுள்ளேன்:

செருப்பு எறியும் கலாசாரம் (இ. பி. கோ. 355ம் படி தண்டனைக்குரிய குற்றம்)

Post a Comment