Pages

15 April 2009

இந்தியா இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அழைத்தப்பேச முயல்வது ஒரு திசை திருப்பு முயற்சி.

இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியா இப்போது பேச அழைப்பது பிரச்னையை, தேவையை திசை திருப்புவதாகும். இப்போதுள்ள உடனடித் தேவை போர் நிறுத்தம் மட்டுமே என்று இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரத்தின் “இந்திய நாடும் இறையாண்மைக் கோட்பாடுகளும்’ என்ற நூலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு அவர் மேலும் பேசியது: “இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறத்தி சிவசங்கர் மேனன் அங்கே சென்று பேசுவார் ஏன்றார்கள். இலங்கை சென்றவுடன் இராணுவத் தளபதி பொன்சேகாவைப் போன்ற சிறந்த தளபதி உலகிலேயே இல்லை என்றார் அவர். இனால், இப்போது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசுவோம் என்று கூறி ஆழைப்பது, இப்போதுள்ள பிரச்னையை, தேவையை திசை திருப்புவதாகும். இப்போதுள்ள தேவை, போர்க்களத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களைப் பாதுகாப்பது மட்டுமே. இதற்கு ஊடனடியாக போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் நல்லகண்ணு.

1 comment:

SuSi said...

ஈழப்பிரச்னை ஓர் இனப் பிரச்னை. ஆனால், அது இங்குள்ள காங்கிரஸ்காரர்களால் பயங்கரவாதப் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழரின் அரசியல் நியாயங்கள் அனைத்தும் ராஜீவ் காந்தி படுகொலையைக் காட்டிப் புறக்கணிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்? ‘சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் செம்மை மறந்த’ ப.சிதம்பரம் போன்றவர்கள், ‘யார் முத்துக்குமார்?’ என்று ஏளனக் குரலில் கேட்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் போன்றவர்கள், ஈழப்பிரச்னை ஒரு பிரச்னையே இல்லை என்று சொல்லும் கே.வி.தங்கபாலுவைப் போன்றவர்கள், தமிழகத் தேர்தல் களத்தில் கலைஞரின் குடைநிழலில் வெற்றிக் கனவுகளோடு நிற்கிறார்கள்!

அவர்கள் கனவை வெற்றுக் கனவாக்க வேண்டியது, தமிழரின் முதற் கடமை. ‘ஈழப்பிரச்னையில் கடுகளவு பாதிப்பும் ஏற்படாது!’ என்று கட்டியம் கூறும் கலைஞரின் வேட்பாளர்களை விலாசமற்றவர்களாக மாற்றுவது வாக்காளர்களின் இரண்டாவது கடன். இவர்களுக்குத் தரும் தோல்வியின் மூலமே புதுடெல் லிக்கு தமிழனின் உண்மையான உணர்வு, புத்தியை புகட்ட முடியும்.

Post a Comment