
பெங்களூரு: தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள ஐ.பி.எல்., "" டுவென்டி-20' தொடரில் அதிக சம்பளம் பெறுபவர், இந்திய வீரர் ராகுல் டிராவிட் தான். அவரது சம்பளம் ரூ. 8.45 கோடி.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தில், இந்திய அணி கேப்டன் தோனி அதிக பட்சமாக ரூ. 6 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் தோனியை விட அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர்களான பீட்டர்சன் (பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்), பிளின்டாப் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் தலா ரூ. 7.35 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டனர்.
சச்சின், கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் "நட்சத்திர' வீரர்கள். இவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் பங்கேற்கும் அணியில் அதிக பட்ச சம்பளம் பெறும் வீரரை விட, 15 சதவீதம் அதிகமான சம்பளம் இவர்களுக்கு வழங்க வேண்டும். இதன்படி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் பீட்டர்சன் விலையை விட அதிகமாக சுமார் ரூ. 8.45 கோடி சம்பளம் பெற உள்ளார் டிராவிட். சென்னை அணி சார்பில் பிளின்டாப் ரூ. 7.35 கோடிக்கு வாங்கப்பட்ட போதும், கேப்டன் தோனி நட்சத்திர வீரர் இல்லாததால் அவருக்கு ரூ. 6 கோடி மட்டும் தான் கிடைக்கும்.
No comments:
Post a Comment