Pages

05 March 2009

பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வரலாம். ஆனால் காங்கிரஸ் வரக்கூடாது: வைகோ

மதுரை: திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளிக்கு ஆதரவாக பேசியதால் பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்தூர் மணியை திண்டுக்கல் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் வைத்துள்ளனர்.

மத்திய சிறையில் சென்று கொளத்தூர் மணியை சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இச்சந்திப்பிற்கு பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

வைகோ கூறியதாவது
ஐ.நா., தலையிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார். அதுவரை ஆயுதங்களைக் கைவிட மாட்டோம் என புலிகள் ஐ.நா.,வுக்கு எழுதிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், முல்லைத் தீவில் இருந்து தமிழர்கள் வெளியேற இலங்கை ராணுவம் உதவவில்லையென புலிகள் கூறியதாக, பிரணாப் முகர்ஜி கடந்த 28ம் தேதி பொய்யான தகவலை வெளியிட்டார். பூர்வீக மண்ணில் இருந்து தமிழர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றும் முயற்சி அங்கு நடக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென பிரணாப் கூறியதாக முதல்வர் கருணாநிதி பெருமையாகக் கூறுகிறார். ஆனால், இந்தியாவிடம் இருந்து இது போன்ற அறிவிப்பு வரவில்லையென இலங்கை ராணுவம் கூறுகிறது. காங்., தவிர யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும். மதவாத கட்சியான பா.ஜ., கூட வரலாம். பா.ஜ., ஆட்சியில் ஈழத்தமிழர்களுக்கு சிறிதளவு கூட பாதிப்பில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment