
நியூயார்க்: மகாத்மா காந்தியின் பொருட்களை வாங்கிய விஜய் மல்லையா இந்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு.
மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, சாப்பாட்டு தட்டு, குவளை, ஒரு ஜோடி செருப்பு, பாக்கெட் கெடிகாரம், ரத்த பரிசோதனை அறிக்கை, மாணவர்களுக்கு கையெழுத்திட்டு அனுப்பிய வாழ்த்து தந்தி ஆகியவற்றை அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர் தனது சொந்த பொறுப்பில் வைத்துள்ளார்.
அவர் இந்த பொருட்களை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஒரு ஏல மையத்தின் மூலம் ஏலத்தில் விட்டார்.
இதனை தடுக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்கு ஓடிஸ் விதித்த நிபந்தனைகளை அரசு ஏற்க மறுத்தது. இந்நிலையில் அவருடைய பொருட்கள் ஏலம் விடப்பட்டன அவற்றை கிங் பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா 1.80 மில்லியன் டாலருக்கு ஏலம் ஏடுத்துள்ளார். ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை விரைவில் இந்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளார்.
No comments:
Post a Comment