Pages

26 March 2009

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ஊதியம் உயர்வு

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு படிகள் வழங்கப்படுகிறது. இத்தொகை கடைசியாக 1998ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. இதன்பின், தற்போது ஊதியங்களை உயர்த்தி, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பிறப்பித்துள்ள உத்தரவு: தேர்தலின் போது பணியாற்றும் அரசு ஊழியர்கள், போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், மத்திய காவல் படையினர் போன்றோருக்கு ஊதியம் மற்றும் உணவுப்படி இந்த ஆண்டு முதல் உயர்த்தப்படுகிறது.

ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரிக்கு பயிற்சி, தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணும் பணி ஆகியவற்றுக்கு சேர்த்து மொத்தமாக 1,450 ரூபாய் வழங்கப்படும். ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளருக்கு 600 ரூபாய், ஓட்டுச்சாவடி அதிகாரிக்கு 900 ரூபாய், ஓட்டுச்சாவடி அலுவலக உதவியாளருக்கு 400 ரூபாய், ஓட்டு எண்ணும் இடத்தின் அலுவலக உதவியாளருக்கு 200 ரூபாய், ஓட்டு எண்ணிக்கை உதவியாளருக்கு 450 ரூபாய் வழங்கப்படும்.

மண்டல அதிகாரிக்கு 800 ரூபாய், உதவி மண்டல அதிகாரி, வரவேற்பு அதிகாரி, பொருளாளர், உதவி பொருளாளர், கிராம நிர்வாக அதிகாரி போன்றோருக்கு 550 ரூபாயும், கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகியோருக்கு 400 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

thanks dinamalar

No comments:

Post a Comment