Pages

19 March 2009

லாலு கட்சியுடன் கூட்டணி இல்லை - காங்கிரஸ்

லாலு தங்களை கைவிட மாட்டார் என காங்கிரஸ் நினைத்திருந்த நிலையில் அவரும் அந்தக் கட்சியை படாதபாடு படுத்திவிட்டார்.

பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தனக்கு 25 தொகுதிகளையும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்திக்கு 12 இடங்களையும் ஒதுக்கிவிட்ட லாலு, காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி அந்தக் கட்சியின் மானத்தையே வாங்கிவிட்டார்.

2004 தேர்தலில் லாலு கட்சி 26 இடங்களிலும், பாஸ்வான் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரசுக்கு 4 தொகுதிகளும் தேசியவாத காங்கிரசுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் அந்தக் கூட்டணி வென்றது.

மூத்த காங்கிரஸ் தலைவருமான சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இந்த லட்சணத்தில் நாங்கள் எங்கள் கட்சியின் தொண்டர்களின் முகத்தை எப்படி பார்ப்பது என்று கூட தெரியவில்லை.

பீகாரில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் லாலு பிரசாத்தின் தன்னிச்சையான இந்த தொகுதி ஒதுக்கீடு காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது.

இதனால் நாங்களாகவே எத்தனை தொகுதிகளில் முடியுமோ அத்தனை தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து விட்டோம் என்றார். இதன்மூலம் கூடுதல் இடங்களைத் தராவிட்டால் காங்கிரஸ்- லாலு, பாஸ்வான் கூட்டணி உடையும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே தேர்தலில் போட்டியிட தனக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலு பிரசாத்தின் மைத்துனரும், எம்பியுமான சாது யாதவ் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment