Pages

22 January 2009

சத்யம்-வாங்க விரும்பும் எல் & டி (L&T)

புதன்கிழமை, ஜனவரி 21, 2009
மத்திய அமைச்சர் பிசி குப்தாவிடம், எல் அண்டு டி நிறுவனத் தலைவர் ஏஎம் நாயக் நேற்று கலந்து பேசினார்.
சத்யம் நிறுவனத்தில் எல் அண்டு டிக்கு 4 சதவிகித பங்குகள் உள்ளன. எல் அண்ட் டி நிறுவனம் சத்யத்தை ஏற்று நடத்த விரும்பினாலும், அது பற்றிய இறுதி முடிவை சத்யம் இயக்குநர் குழுவே தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் குப்தா.
இதற்கிடையே பல வெளிநாட்டு நிறுவனங்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸை ஏற்று நடத்த விரும்புவதாக சத்யம் இயக்குநர் குழு உறுப்பினர் தருண் தாஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் சம்பளம் வழங்குவதற்கு தேவையான பணத்தை திரட்டி விட்டதாக அதிகாரிகள் கூறியதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சத்யம் பிபிஓ:

சத்யம் பிபிஓ நிறுவனத்தை ஏற்று நடத்த எஸ்ஸார் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகையை குறிப்பிட்டு வரைவு ஒன்றையும் சத்யம் இயக்குநர் குழுவுக்கு ஏஜி அனுப்பியுள்ளது. இந்தச் செய்திகள் வெளியாகத் துவங்கிய சில நிமிடங்களில் சத்யம் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன.
கையகப்படுத்தும் திட்டம் இல்லை - விப்ரோ

நிதி மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மற்றும் மைடாஸ் நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை என்று விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி தெரிவித்தார்

No comments:

Post a Comment