Pages

07 January 2009

சத்யம் நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜு இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை அடுத்து பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் 600 குறைந்தன.சத்யம் நிறுவன பங்குகள் ரூ.188-லிருந்து ரூ.50 ஆக குறைந்தது.

அவருடையக் கடிதத்தில், இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,361 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை. ரூ. 5,040 கோடி தான் உள்ளது. மேலும் ரூ.376 கோடி ரூபாய் வட்டித் தொகையும் இருப்பதாகக் காட்டப்பட்டது. உண்மையில் அந்தப் பணம் இல்லை. நிறுவனத்தின் கணக்கில் இவை திரித்துக் காட்டப்பட்டன என்றும்,

கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடியை வருவாயிலும், ரூ. 649 கோடியை லாபத்திலும் காட்டினோம். ஆனால், உண்மையில் வருவாய் ரூ. 2,112 கோடி தான். லாபம் ரூ. 61 கோடி தான் என்று ராமலிங்க ராஜு கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக இவ்வாறு லாபத்தை உயர்த்திக் காட்டி வந்ததாகவும் ஒரு கட்டத்தில் உண்மையான லாபத்துக்கும் கணக்கில் காட்டப்பட்ட லாபத்துக்கும் இடையிலான வித்தியாசம் மிக மிக அதிகரித்துவிட்டதாகவும். இதை சரி செய்யும் முயற்சியாகத்தான் மேடாஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்து கணக்குகளை நேர் செய்ய திட்டமிட்டோம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இந்த கணக்குகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என இதர இயக்குனர்கள் கூறியுள்ளனர்.


ராஜிநாமா கடிதம்

No comments:

Post a Comment