Pages

21 January 2009

முந்திரிக்கொட்டை ஒபாமா


அப்பாடா ஒரு வழியாக உலக நாட்டமை பதவியேற்றுவிட்டார். துணை அதிபராக ஜோ பைடன் முதலில் பதவியேற்றார் பின்னர் தனது ஒரு கையை லிங்கன் பைபிள் மீது வைத்து சுப்ரீம் கோர்ட் முதன்மை நீதிபதி ஜான் ராபர்ட் முன்மொழிய தனது பதவியை ஏற்றார். நீதிபதி பதவிபிரமாண வாக்கியத்தின் முதல் வரியை நிறைவு செய்யுமுன் முந்திரிக்கொட்டை போல் ஒபாமா தொடர்ந்தார், பின்பு இடையில் நிதிபதி கூறிய முழுவரியையும் கூறமுடியாமல் திணறிய போது நீதிபதி மீண்டும் கூறி வரியை நிறைவு செய்தார். தனது பதவி பிரமாண உரையின் முதல் வரியில் தன் பெயரை "பாரக் உசைன் ஒபாமா" எனக் கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பதவிபிரமாணத்திற்க்குப் பின் தொடர்ந்த தனது முதல் உரையில் பழைய நாட்டாமை இராக் பெட்ரோல் கிடங்கு திருட்டு புகழ் புஷ்க்கு நாட்டை நல்ல நிலமையில் வைத்துள்ளதற்க்காக நன்றி தெரிவித்தார். அமெரிக்கா எல்லா நாடுகளுக்கும் நண்பன், தீவிரவாதிகளை எதிர்த்து போராடுவோம், இராக்கை அவர்களுக்கே விட்டுக் கொடுப்போம் போன்றவை அவரின் உரையில் முக்கிய இடம் பிடித்தன. நாமும் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்து நம்ம நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பிரச்சனையை உலக நாட்டாமையிடம் தெரிவித்து சரியான தீர்ப்பு கேட்போம். அடுத்து நம்ம ஊரு அரசியல்வாதிகள் எப்போது சால்வையை எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு போறாங்களோ தெரியாது.

No comments:

Post a Comment