உலகத்திலேயே சிறந்த தளபதி என்று இலங்கை இராணுவத்தளபதி பொன்சேகாவை புகழ்ந்திருக்கிறார் ஒரு காங்கிரஸ்காரர்.
காங்கிரஸ்காரர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது. அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். உண்மையில் உலகத்திலேயே கொடூரமான அரக்கன் இலங்கை இராணுவத்தளபதிதான்.
கிளிநொச்சியை பிடிக்க முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தார்கள். வேறு வழியின்றி சிங்களப்படை பின்வாங்கியது. அந்த சமயத்தில் இந்திய அரசுதான் சிங்களப்படைக்கு இராணுவ உதவிகளை கொடுத்து கிளிநொச்சியை கைப்பற்ற வைத்தது.
இப்படி ஒரு கேடுகெட்ட செயல்களை செய்து வருகிறது காங்கிரஸ்.
ஈழப்பிரச்சனை தொடர்பாக எத்தனை போராட்டம் நடந்தாலும் காங்கிரஸ் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மறுக்கிறது.
தமிழர்களைப் பொறுத்தவரை முதல் எதிரி காங்கிரஸ் தான். இனி எக்காலத்திலும் அக்கட்சியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது. அதுமட்டுமல்ல, இனி காங்கிரஸ் கட்சியை புல், பூண்டு தெரியாமல் இருக்கும் இடமே தெரியாமல் அழிக்க வேண்டும். என ஆவேசமாக கூறினார்.
No comments:
Post a Comment