Pages

12 January 2009

விப்ரோவுக்கு உலக வங்கி தடை - பங்குகள் சரிவு

நியூயார்க்: விப்ரோ நிறுவனத்துக்கு உலக வங்கி விதித்துள்ள தடையால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.

ஆவணங்களை முறையாகப் பராமரிக்காதது, மோசடிக்கு உடந்தை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் விப்ரோவுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.

விப்ரோவுடன் மேலும் 3 இந்திய நிறுவனங்களையும் உலக வங்கி நீக்கியுள்ளது. இதில் விப்ரோவை 2011 வரை நீக்கியுள்ளனர்.

இந்த வர்த்தகத்தில் 8.94 சதவிகிதம் விலை குறைந்து 228.55-க்கு கைமாறின விப்ரோ பங்குகள்.

இதன்படி வரும் 2011 வரை விப்ரோவுக்கு எந்த ஆர்டரும் உலக வங்கியிடமிருந்து கிடைக்காது.

தனது பங்குகளை சந்தேகத்துக்கிடமான முறையில் உலக வங்கி ஊழியர்களுக்கு விப்ரோ விற்றுள்ளதாலும், வங்கியுடன் வர்த்தகம் செய்துகொண்டே, வங்கி ஊழியர்களை தனிப்பட்ட முறையில் விப்ரோ அணுகியிருப்பது முறைகேடானது, நாணயமற்றது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதேபோல, மெகாசாப்ட் என்ற இந்திய கம்ப்யூட்டர் நிறுவனத்தையும் உலக வங்கி தடை செய்துள்ளது.

உலக வங்கித் தடையால் எங்களுக்கு எந்த நஷ்டமும் கிடையாது என விப்ரோ அறிவித்துள்ளது.

நன்றி : தாட்ஸ்தமிழ்

No comments:

Post a Comment