
ஸ்டாக்ஹோம்,: மேலாண்மை, பொறியியல் படித்த மாணவர்கள் பணியாற்ற விரும்பும் முன்னணி 50 நிறுவனங்கள் பட்டியலில் இணைய தள நிறுவனமான கூகுள் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஊழியர் திருப்தியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை யுனிவர்சம் நிறுவனம் ஆய்வு செய்து அறிவிக்கிறது. அதன் சார்பில் மேலாண்மைக் கல்வி (பி ஸ்கூல்), பொறியியல் பயிலும் மாணவர்கள் இடையே தனித்தனியாக இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1.2 லட்சம் மாணவர்கள் அதில் பங்கேற்றனர். திறமையை பயன்படுத்துதல் மற்றும் தக்க வைத்தலில் வெற்றிகரமாக விளங்கும் 50 நிறுவனங்கள் எவை என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதில் மேலாண்மை, பொறியியல் மாணவர்கள் இடையேயும் பணியாற்ற சிறந்த நிறுவனமாக கூகுள் முதலிடம் பிடித்தது.
கூகுள் முதலிடத்தில் இருப்பதில் ஆச்சரியமில்லை. சிறந்த நற்பெயர், விரைவான சேவை ஆகியவற்றால் உலகம் முழுவதும் மாணவர்கள் பணியாற்ற முதல் தேர்வாக அதை கருதுகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலாண்மை கல்வி மாணவர்களைப் பொருத்தவரை 2வது இடத்தை பிரைஸ்வாட்டர்ஹவுஸ் பிடித்தது. பொறியியல் மாணவர்கள், கூகுளின் கடும் போட்டி நிறுவனமான மைக்ரோசாப்டை 2வது இடத்துக்கு தேர்வு செய்தனர். நிதி நிறுவனங்கமான கோல்டுமேன் சாச் 4வது, எர்னஸ்ட் அண்ட் யங் 5வது இடத்தில் உள்ளன. பிராக்டர் அண்ட் கேம்பிள், ஜேபி மார்கன், கேபிஎம்ஜி, மெக்கன்சி, டிலாய்ட் ஆகியவை முறையே 6 முதல் 10ம் இடம் வரை பிடித்தன.
No comments:
Post a Comment