Pages

24 August 2009

மருத்துவமும், மூட நம்பிக்கையும்...

படிக்காதவர், படித்தவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி மூட நம்பிக்கைகளுக்கு ஆட்படுவோர் நம் நாட்டில் அதிகம். அப்படி அவர்கள் செய்வதெல்லாம் சரியா? என்றால் இல்லை என்பதுதான் மருத்துவ அறிஞர்களின் பதில்! அந்த மாதிரியான மூட நம்பிக்கைகளை பார்ப்போம்,

* மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு உரிய மருத்துவம் பார்க்காமல் சூடு வைப்பது. வலிப்பு நோய்களுக்கு கூர்மையான இரும்பு ஆயுதங்களை கையில் கொடுப்பது.

* குடலை சுத்தம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அடிக்கடி பேதி மருந்து, விளக்கெண்ணை போன்றவற்றைக் குழந்தைகளுக்கு தருவதால், குடல் நலக் கேடுகள் ஏற்பட்டு, உடல் நலத்தை பாதிக்கும்.

* உடல் சூடு ஏற்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு, சூட்டினைத் தணிப்பதற்காக, எண்ணை தேய்த்து குளித்தல், மூக்கிலும், காதிலும் மற்றும் கண்ணிலும் எண்ணையை விடுதல் போன்றவை கூடாது.

* முட்டை, பயத்த மாவு ஆகிய தேவையற்ற பொருட்களைக் கொண்டு, உடம்பினில் தேய்த்துக் குளித்தால் ஒவ்வாமையினால் தோலில் அரிப்பு, தடிப்பு தோன்றும்.

* கண் நோய்க்கு, முலைப் பால், இலைச்சாறு போன்றவற்றை விடுவதால் கண்பார்வை பாதிக்கும்.

* குடல் புழுக்களை அகற்றுவதற்காக, வேப்பெண்ணையைக் குழந்தைக்கு அளிப்பதால், நுரையீரலில் எண்ணை இறங்குவதோடு, குருதி மூலமாக மூளைக்குச் சென்று மூளையை பாதிக்கும்.

* குழந்தைகளுக்கு அக்கி எனப்படும் வைரஸ் கிருமி நோயினால், தோலில் கொப்பளங்கள் உண்டாகிடும் போது, செம்மண் கொண்டு எழுதுவதும், கரும்புள்ளி- செம்புள்ளிகளை பதிப்பதும் கூடவே கூடாது.

No comments:

Post a Comment