ஒரே நேரத்தில் 2 வேலை பார்க்கக்கூடிய வகையில் உலகின் முதல் 2 ஸ்கிரீன் லேப்டாப் கம்ப்யூட்டரை அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. அலாஸ்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஜிஸ்கிரீன்.
அது ஸ்பேஸ்புக் என்ற பெயரில் 2 ஸ்கிரீன்கள் கொண்ட லேப்டாப்பை தயாரித்துள்ளது. அந்த லேப்டாப்பில் 15.4 அங்குல ஸ்கிரீன்கள் இரண்டு இருக்கும். ஒரே நேரத்தில் 2 திரையிலும் கீ&போர்டு மூலம் பணியாற்ற முடியும். இதுபற்றி அமெரிக்க தொழில்நுட்ப வெப்சைட் ஒன்றிடம் ஜிஸ்கிரீன் நிறுவனர் கார்டன் ஸ்டீவர்ட் கூறுகையில், 2 ஸ்கிரீன்கள் கொண்ட லேப்டாப், பெ ரும்பாலோருக்கு பயன்படாது எனத் தெரியும். எனினும், சிலர் அதிக வேலைப்பளுவால் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு இது உதவும்.
ஸ்பேஸ்புக் லேப்டாப்பில் மடிக்கக் கூடிய 2 திரைகள் இருக்கும். ஒரே கீபோர்டு மூலம் இரண்டு திரையையும் இயக்கலாம் என்றார். இந்த லேப்டாப் விலை சுமார் ரூ.1.2 லட்சமாக இருக்கும். 2 திரைகளுக்கு ஏற்ப பேட்டரி நீடிப்புத் திறன் கொண்டிருக்கும். சாதாரண லேப்டாப்பைவிட சிறிது எடை அதிகமாக இருக்கும். உலகின் முதல் 2 திரை லேப்டாப் இதுதான் என்றும் கார்டன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment