Pages

04 August 2009

தெரியுமா?

குழந்தைகள் குண்டூசியை விழுங்கிவிட்டால் நாம் எப்படிப் பதறுவோம். இதை கண்டுபிடித்து அகற்ற அதற்கென்றே ஒரு கருவி உள்ளது. அதன் பெயர் இசபே கோ காஸ்ட்ரோ டியோடினஸ் என்பதாகும். விழுங்கப்பட்ட குண்டூசி இரைப்பை குடலின் முற்பகுதிக்கு சென்றடையும். இந்தக் கருவியை குழந்தையின் வாயில் விட்டு எடுத்தால் போதும் குண்டூசி வெளியே எடுத்து விடலாம். இதற்காக எந்த அறுவை சிகிச்சையும் செய்யத் தேவையில்லை.

* ரத்தக்குழாய்கள் பழுதான பகுதியை வெட்டி மீண்டும் இணைக்கவும், விலா எலும்புகளை இணைக்கவும் சிறிய அளவிலான பின்களை ரஷ்ய மருத்துவர்கள் உபயோகிக்கிறார்கள். இரண்டு தாள்களை ஸ்டேப்லர் மூலம் இணைப்பதுபோல பின் செய்கிறார்கள். இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

* மனிதன் வானியலில் இந்த அளவுக்கு முன்னேறக் காரணமாக இருந்தது தொலைநோக்கியாகும். இதை நன்கு பயன்படுத்தி முதன் முதலில் மக்களின் கவனத்தை திசை திருப்பியவர் கலீலியோதான். ஆனாலும் தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் ஹான்லிப்பர்சி என்பவர் ஆவார். 1608-ம் ஆண்டு இவர் தொலைநோக்கியை உருவாக்கினார்.

தற்போது இதேபோல் லட்சக்கணக்கான மடங்கு உருப்பெருக்கி காட்டும் தொலைநோக்கிகள் பயன்பாட்டில் உள்ளன. உலகிலேயே மிகப்பெரியதும் திறன் வாய்ந்ததுமான தொலைநோக்கி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாலோமார் என்னும் மலைமீது அமைக்கப்பட்டு உள்ளது. இது 9 லட்சம் மடங்கு உருவத்தை பெருக்கிக் காட்டும் தன்மை உடையது.

No comments:

Post a Comment