Pages

02 July 2009

நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் யார்?

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து சட்டப் பேரவையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பேரவையில் சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் பா.ம.க. உறுப்பினர் மேகநாதன் பேசினார். ஒரு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை மத்திய அமைச்சர் மிரட்டியுள்ளார் என்று தொடங்கி, அமைச்சரின் பெயரை அவர் கூறினார்.

இதையடுத்து அமைச்சர்கள் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அமைச்சரின் பெயரை மேகநாதன் சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேரவை துணைத் தலைவர் வி.பி. துரைசாமி: இவ்வளவு காலம் பேரவை உறுப்பினராக இருக்கிறீர்கள். அவையில் இல்லாத ஒருவர் மீது குற்றம் சுமத்தக்கூடாது என்பதுகூடவா உங்களுக்குத் தெரியாது.

தொடர்புடைய நீதிபதியே அமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை. மேலும் நீதிபதிகளைப் பற்றி பேரவையில் பேச அனுமதி இல்லை.

எனவே அவர் சொன்ன அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு பா.ம.க. உறுப்பினர் மேகநாதன் பேசியது அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

வேல்முருகன் (பா.ம.க.): நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சர் யார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: நீதிபதியே அமைச்சரின் பெயரைச் சொல்லவில்லை. இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் அனைவரையும் நிறுத்தி, நீதிபதியை மிரட்டியது யார் என்றா கேட்க முடியும்?

அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் எழுந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கத்தை அளித்தார்.

No comments:

Post a Comment