Pages

18 June 2009

விஜய் அவார்ட்ஸ்

சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவை விஜய் டி.வி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, 2008-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து கடந்த வாரம் விருது வழங்கியது.

இதில் கமல்ஹாசன், ‘தசாவதாரம்' படத்துக்காக ‘அபிமான ஹீரோ', ‘சிறந்த காமெடியன்', ‘சிறந்த வில்லன்', ‘சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்' என நான்கு விருதுகளை வென்றார். நயன்தாரா ‘அபிமான ஹீரோயின்' விருது பெற்றார்.

இவர்களுடன் நடிகர்கள் சூர்யா, தனுஷ், சாந்தனு நடிகைகள் கௌதமி, சினேகா, ‘பூ' பார்வதி இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜேம்ஸ் வசந்தன் இயக்குநர்கள் சசிகுமார், கௌதம் மேனன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி ஆகியவற்றுடன் சுவாரஸ்யமாக நடைபெற்ற ‘யுனிவர்செல் விஜய் அவார்ட்ஸ்' விழாவின் தொகுப்புகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜூன் 18, 19) இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.

No comments:

Post a Comment